நீங்க ப்ரியா வாரியரை கண்டமேனிக்கு வைரலாக்கியதால் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா?
Recommended Video

திருவனந்தபுரம்: நடிகை ப்ரியா வாரியருக்கு ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்ததால் அவருக்கு என்ன நடந்தது என்பதை அவரே தெரிவித்துள்ளார்.
கண்ணடிச்சா பிரபலமாக முடியுமா என்று இனி யாரும் கேட்க முடியாது. கண்ணடித்ததாலேயே தேசிய அளவில் பிரபலமாகிவிட்டார் மலையாள நடிகை ப்ரியா வாரியர்.
இத்தனைக்கும் முதல் படத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பு
ஒரு அடார் லவ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ப்ரியா. இந்த படத்தின் வேலை முடியும் வரை அடுத்த படத்தில் ப்ரியா நடிக்க மாட்டார் என்று இயக்குனர் ஒமர் லுலு தெரிவித்துள்ளார்.

புதுப்படம்
ப்ரியா வாரியர் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் அதற்காக அவருக்கு ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. விசாரித்ததில் ப்ரியா எந்த புதுப்படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

டோணி
கிரிக்கெட் வீரர் டோணி தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று ப்ரியா வாரியர் தெரிவித்துள்ளார். ஒரு முறையாவது டோணியை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ப்ரியா.

ப்ரியா
தனக்கு இவ்வளவு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ப்ரியா. உங்களின் ஆதரவால் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்த என்னை முக்கிய கதாபாத்திரமாக இயக்குனர் ஒமர் மாற்றிவிட்டார் என்று கூறி மகிழ்கிறார் ப்ரியா.


Click it and Unblock the Notifications