டோணி மகள் பாடும் வீடியோவை பார்த்து இம்பிரஸ் ஆன பிரபல இயக்குனர்
திருவனந்தபுரம்: கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் ஜிவாவை வாழ்த்தியுள்ளார் இயக்குனர் ப்ரியதர்ஷன்.
கிரிக்கெட் வீரர் டோணியின் செல்ல மகள் ஜிவா மலையாள பாடல் பாடியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலானது. அந்த வீடியோவை இயக்குனர் ப்ரியதர்ஷனும் பார்த்துள்ளார்.
ஜிவா குறித்து ப்ரியதர்ஷன் வாழ்த்தி ட்வீட் போட்டுள்ளார்.
ஜிவா
டோணி நீங்கள் கிரிக்கெட் லெஜண்ட் ஆனது போன்று உங்களின் மகள் பாடுவதில் லெஜண்ட் ஆக கடவுள் அவரை ஆசிர்வதிப்பாராக என்று ப்ரியதர்ஷன் வாழ்த்தியுள்ளார்.
பாராட்டு
குட்டி மோலு மலையாளம் பாடல் பாடியுள்ளது!!! செம என்று ட்வீட்டியுள்ளார் நடிகை ஆர்த்தி.

ரசிகர்கள்
ஜிவா பாடும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர் நிச்சயம் பாடுவதில் லெஜண்டாக வருவார் என்று தெரிவித்துள்ளனர்.

பாடகி
டோணியின் மகள் இந்த வயதில் எவ்வளவு அழகாக பாடுகிறார். அவர் ஒரு ஜீனியஸ் என்று சீனியர் பாலிவுட் நடிகர் அனுபம் கேர் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











