twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபப்பட்டு பார்த்தது அந்த ஒரு முறைதான்.. பிரபல இயக்குனர் தகவல்!

    By
    |

    சென்னை: எப்போதும் புன்னகையோடு இருக்கும் எஸ்.பி.பியை கோபத்துடன் பார்த்தது அந்த ஒரு முறைதான் என்று பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது லேசான அறிகுறிதான், விரைவில் திரும்பி வருவேன் என்று அவர் கூறியிருந்தார்.

    வேத பாடசாலை தொடங்க.. தனது பூர்வீக வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக கொடுத்த எஸ்.பி.பி!வேத பாடசாலை தொடங்க.. தனது பூர்வீக வீட்டை காஞ்சி சங்கர மடத்துக்குத் தானமாக கொடுத்த எஸ்.பி.பி!

    அவசர சிகிச்சை

    அவசர சிகிச்சை

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப் பட்டது. வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை பெற்றும் சிகிச்சை அளித்தனர். அவர் குணமடைய ரசிகர்கள், திரையுலகினர் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

    காலமானார்

    காலமானார்

    பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த 51 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சில நாட்களுக்கு முன் மோசமானது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 74. அவருடைய மரணம் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    பண்ணை வீட்டில்

    பண்ணை வீட்டில்

    அவர் உடல், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ரசிகர்கள், திரையுலகினர் அவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். எப்போதும் புன்னகையுடன் இருக்கும் அவருக்கு பிரபலங்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இயக்குனர் பிரியதர்ஷன்

    இயக்குனர் பிரியதர்ஷன்

    இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், தனக்கு எஸ்.பி.பியுடன் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நான் அவரை முதன்முதலாக, 1983 ஆம் ஆண்டு அவருடைய ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் சந்தித்தேன். அப்போது அவருக்காக காத்திருந்த போது, ஒரு வயலின் இசைக் கலைஞர் பண உதவிக்காக அவரை பார்க்க வந்தார்.

    காலைத் தொட்டார்

    காலைத் தொட்டார்

    எஸ்.பி.பி வந்ததும் அந்த இசைக் கலைஞர் அவர் காலைத் தொட்டார். எஸ்.பி.பிக்கு கோபம் வந்துவிட்டது. நான் அவரை புன்னகை இல்லாமல் பார்த்தது அப்போதுதான். அடுத்த நிமிடமே, அவரைக் கூப்பிட்டு, நான் உங்களுக்கு மூத்தவனா இருந்தாலும் உங்கள் பெற்றோர், குருவைத் தவிர, யார் கால்லயும் விழாதீங்க என்று அட்வைஸ் செய்தார்.

    நகைச்சுவை உணர்வு

    நகைச்சுவை உணர்வு

    அவர் புன்னகை, குழந்தையை போன்று இருக்கும். அவரை யாருடனும் சண்டையிட்டோ, கோபமாகவே பார்த்திருக்க முடியாது. இசை அமர்வுகளின் போது அவர் நன்றாக ஜோக்கடிப்பார். நல்ல நகைச்சுவை உணர்வு அவருக்கு. அவரது ஒவ்வொரு பாடலையும் இதயத்தில் இருந்து பாடினார். அதனால்தான் அவர் பாடல்கள் எப்போதும் நினைவில் இருக்கின்றன. இவ்வாறு கூறியுள்ளார்.

    English summary
    Priyadarshan On SP Balasubrahmanyam: Nobody Has Ever Seen Him Angry
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X