கடவுளே என் மகளுக்கு... கல்யாணிக்காகக் கோரிக்கை வைத்த பிரியதர்ஷன்

By

சென்னை: சிவகார்த்திகேயேனுடன் நடித்துள்ள தனது மகளுக்கு ஆசி வழங்கும்படி கடவுளிடம் கோரிக்கை வைத்துள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.

சிவகார்த்திகேயன், இந்தி நடிகர் அபய் தியோல், அர்ஜுன், கல்யாணி பிரியதர்ஷன், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள படம், ஹீரோ. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கியுள் இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் சார்பில் ராஜேஸ் தயாரித்துள்ளார். படம், இன்று வெளியாகி உள்ளது.

கல்யாணி பிரியதர்ஷன்

கல்யாணி பிரியதர்ஷன்

இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார், கல்யாணி. இவர், இயக்குனர் பிரியதர்ஷன் - லிஸி தம்பதியரின் மகள். தெலுங்கில் ஹலோ, சித்ராலஹரி, ரணரங்கம் ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், மலையாளத்தில் மரைக்கார் படத்தில் நடித்து வருகிறார்.

முதிர்ச்சியான கேரக்டர்

முதிர்ச்சியான கேரக்டர்

ஹீரோ படம் மூலம் தமிழில் அறிமுகமாவது பற்றி கல்யாணி கூறும்போது, இதில் மீரா என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். மிகவும் முதிர்ச்சியான மனநிலை கொண்ட கேரக்டர். எதையும் செய்யும் முன் பலமுறை யோசித்து செய்பவள். நிஜ வாழ்வில் நான் அப்படியல்ல, அதற்கு நேரெதிரானவள்' என்று தெரிவித்திருந்தார்.

மோகன்லால் வாழ்த்து

மோகன்லால் வாழ்த்து

இந்நிலையில் தமிழில் அறிமுகமாகும் கல்யாணிக்கு நடிகர் மோகன்லால் இன்று காலை வாழ்த்துத் தெரிவித்திருந்தார். கல்யாணியின் தந்தையான இயக்குனர் பிரியதர்ஷனின் நெருங்கிய நண்பர் மோகன்லால் என்பது குறிப்பிடத்தக்கது.

உன் மகள் போல

உன் மகள் போல

இதற்கிடையே, மகள் கல்யாணிக்காக, கடவுளிடம் கோரிக்கை வைத்திருக்கிறார், பாசக்கார அப்பாவான இயக்குனர் பிரியதர்ஷன். இதுபற்றி அவர் டிவிட்டரில், கடவுளே, உன் மகள் போல என் மகளுக்கு ஆசி வழங்கு என்று கூறியுள்ளார்.

ஒரு ரவுண்ட் வருவார்

ஒரு ரவுண்ட் வருவார்

இதற்கு பலர் பதிலளித்துள்ளனர். அதில், கல்யாணி சிறப்பாக நடித்துள்ளார். அவரது கேரக்டரும் அழகாக இருக்கிறது. கண்டிப்பாக தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X