»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

1984-ம் வருடம் எம்.ஏ சைக்காலஜி படித்த ஒரு பட்டதாரி கேரளாவில் இருந்து வெறும் 38 ரூபாயுடன் சென்னைக்கு வந்திறங்கினார். இப்பொழுது 49படங்களை இயக்கி இப்பொழுது இந்தியாவிலேயே முன்னனி இயக்குனர்களில் ஒருவராக முன்னேறியிருக்கிறார்.

இவரது முதல் மலையாளப்படத்தில் நடித்த லிஸி என்ற நடிகையையே காதலித்து திருமணம் செய்துகொண்டார். இப்பொழுது இரண்டு குழந்தைக்கும் தந்தைஇவர்.

ஒரு டப்பிங் தியேட்டர். நவீன கேமராக்கள் மற்றும் பல ஸ்பெஷல் லைட்டுகளை சொந்தமாக வாங்கிவைத்திருக்கிறார். தன்னுடைய ஐம்பதாவது படத்தைகமல்ஹாசனை வைத்து இயக்கப்போகும் இவர் யார் தெரியுமா?

ப்ரியதர்ஷன். கோபுரவாசலிலே, தேவர் மகன் படத்தை இந்தியில் இயக்கியவர். இவர் இயக்கிய ஹேரா பேரி என்கிற இந்தி படம் இந்தியில் லேட்டஸ்ட்ஹிட். இவர் இயக்கிய ஸ்னேகிதியே நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவருகிறது.

ஒணத்திற்கு வரும் என்றார்கள். தயாரிப்பாளர் பிரச்சனையால் தாமதமாகிறது. இந்த மாத இறுதியில் ரிலீஸாகும் என்கிறார்கள்திரைப்படவட்டாரத்தில்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil