நானும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குகிறேன்: பெண் இயக்குனர் அறிவிப்பு, ஆரம்பமே குழப்பமா?
சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப் போவதாக இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாளான் பிப்ரவரி 24ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்றும், அன்றே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் எடுக்கப்படும் என்று படத்தை தயாரிக்கும் விப்ரியா மீடியாவின் தலைவர் பிருந்தா பிரசாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்கப் போவதாக மிஷ்கினிடம் உதவியாளராக இருந்த ப்ரியதர்ஷினியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியிடப்படும் என்று ப்ரியதர்ஷினி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று படப்பிடிப்பு துவங்கும் என்றும், நடிகர், நடிகைகளின் பெயர் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார் ப்ரியதர்ஷினி.
விஜய் மற்றும் ப்ரியதர்ஷினி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நாளில் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications











