»   »  பிரபல துணை நடிகை தற்கொலை

பிரபல துணை நடிகை தற்கொலை

Subscribe to Oneindia Tamil

பிரபல துணை நடிகை பிரியதர்சினி தற்கொலை செய்து கொண்டார்.

வட பழனியைச் சேர்ந்த பிரியதர்சினி (19) எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். தேவர் மகன் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் பின்னர் பல்வேறு படங்களில் சிறிய கேரக்டரிலும், கதாநாயகிக்குதோழியாகவும் நடித்துள்ளார்.

இந் நிலையில் பிரியதர்சினியின் அறைக் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் அவரது தாயர்ஹேமாவதி சந்தேகம் அடைந்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அப்போது அங்கு பிரியதர்சினிதூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீட்டில் போலீசார் சோதனை நடத்தில் பிரியதர்சினி எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இலங்கையில் உள்ள எனது அக்காவை நீண்டநாட்களாக பார்க்க முடியாத ஏக்கத்தில் இருக்கிறேன் என்று எழுதி இருக்கிறார்.


இதையடுத்து போலீசார் பிரியதர்சினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டைமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிரியதர்சினியின் தாயார் ஹேமாவதி கூறுகையில்,

பிரியதர்சினிக்கு அவளது அக்காள் மீது பாசம் அதிகம். இந் நிலையில் பிரியதர்சினியின் அக்காவைஇலங்கையில் திருமணம் செய்து கொடுத்தோம். சமீபத்தில் அவளுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையும், அவளும்சென்னை வருவதாக கூறியிருந்தாள். ஆனால் வரவில்லை. திருமணத்தின்போதே, அக்காவை இலங்கைமாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டாம் என்று பிரியதர்சினி கூறினாள்.

அவள் நினைத்ததை போல் திருமணத்துக்கு பிறகு எனது பெரிய மகள் சென்னைக்கு வரவில்லை. அக்காவைபார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் பிரியதர்சினி இருந்தாள். அதன் காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள் என்றார்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil