போட்டோ ஷூட்டில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் பிரியாமணி!
சென்னை : நடிகை பிரியாமணி பருத்தி வீரன் திரைப்படத்திற்காக தேசிய விருது வென்றவர்.
இந்தியில் விரைவில் வெளியாக இருக்கும் தி ஃபேமிலி மேன் 2 வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
தமிழ்,ஹிந்தி,தெலுங்கு, கன்னடம் என 4 மொழிகளிலும் படு பிஸியாக நடித்து வரும் பிரியாமணி இதற்கிடையில் இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட்டிலும் அசத்தி வருகிறார்.

தேசிய விருது
ஒரு படத்தின் கிளைமாக்ஸ் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என அனைவரும் வியந்து பார்த்த பருத்திவீரன் திரைப்படம் இன்றளவும் தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பிரியாமணியின் இயல்பான நடிப்பு அனைவரையும் பாராட்ட வைத்ததோடு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் இவருக்கு கிடைத்தது.

வெப் சீரிஸ்களில்
தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ள பிரியாமணி தமிழுக்கு பாரதிராஜாவின் கண்களால் கைது செய் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் ஹிட்டாகின. நீண்ட காலமாக தமிழ் படங்களில் நடிக்க முடியாமல் ஹிந்தியில் படு பிஸியாக திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார்.

வைரல் ஆனது
தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது இதில் கதாநாயகியாக பிரியாமணி நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது சில சர்ச்சைகளிலும் சிக்கியது.
Recommended Video

இளம் நடிகைகளுக்கு டஃப்
இதுதவிர தெலுங்கில் விராட பருவம், நாரப்பா மற்றும் ஹிந்தியில் மைதான் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு பல்வேறு மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் அதே வேலையில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போட்டோ ஷூட்டிலும் கலக்கியுள்ளார். சிகப்பு சேலையில் முழுக்கை அளவிற்கு சட்டை அணிந்து படு நேர்த்தியாக தன்மை குறையாமல் இன்று இருக்கும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் உள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் பலரது பாராட்டுக்களையும் பெற்று லைக்குகளை அள்ளுகிறது.


Click it and Unblock the Notifications











