அந்த பிரபல ஹீரோவின் அம்மா, தன் மகனை திருமணம் செய்ய ஆட்சேபனை இல்லை என்றார்..நடிகை பிரியாமணி திடுக்!

By

சென்னை: அந்த பிரபலமான ஹீரோவின் அம்மா, தன் மகனை திருமணம் செய்து கொள்ள ஆட்சேபனை இல்லை என்று சொன்னதாக பிரியாமணி கூறியுள்ளார்.

நடிகை பிரியாமணி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர், இவர்.

மைதானில் மனைவி

மைதானில் மனைவி

இப்போது ராணாவுடன் விரதபர்வம் 1992 என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதில் நக்சலைட்டாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியில் அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில், அவர் மனைவியாக நடிக்கிறார். இந்தி வெப் சீரிஸான ஃபேமிலிமேனில் மனோஜ் பாஜ்பாய் மனைவி கேரக்டரில் நடித்திருந்தார்.

சயனைடு பயோபிக்

சயனைடு பயோபிக்

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அசுரனின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பா, 20 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 'சயனைடு' மோகனின் பயோபிக் படங்களில் நடித்து வருகிறார். இப்போது திடுக் தகவல் ஒன்றைக் கூறியுள்ளார்.

ஆட்சேபனை இல்லை

ஆட்சேபனை இல்லை

அதாவது ஹீரோ ஒருவரின் அம்மா, தனது மகனை திருமணம் செய்துகொள்ள தனக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியதாக தெரிவித்துள்ளார். அந்த ஹீரோ தருண். முன்னாள் ஹீரோயின் ரோஜா ரமணியின் மகனான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். தமிழில், புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18 படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு

தெலுங்கு

தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருந்த அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, இடி நா லவ் ஸ்டோரி என்ற தெலுங்கு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு நடிக்கவில்லை. தெலுங்கில் பிரியா மணியுடன் நடித்தபோது, இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இப்போது நடிகை பிரியாமணி கூறியிருப்பதாவது:

நவ வசந்தம்

நவ வசந்தம்

கடந்த 2005 ஆம் ஆண்டு நவ வசந்தம் என்ற தெலுங்கு பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் நாங்கள் காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வதந்தி பரவி இருந்தது. அப்போது தருணின் அம்மா, நடிகை ரோஜா ரமணி ஸ்பாட்டுக்கு வந்தார்.

உண்மை சொல்லலாம்

உண்மை சொல்லலாம்

'நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறீங்களா? அது உண்மைன்னா, நீங்க கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்படி இருந்தா, என்கிட்ட உண்மையை சொல்லலாம்' என்றார். அதற்கு பிறகுதான் எங்களைப் பற்றி வதந்தி எப்படி பரவி இருக்கிறது என்பது தெரியவந்தது.

வதந்தி பரவியது

வதந்தி பரவியது

பின்னர் தருண், அவர் அம்மாவிடம், நாங்கள் நண்பர்கள்தான். எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்தார். பொதுவாக ஒரே ஹீரோவுடன் சில படங்களில் ஜோடியாக நடித்தால் இப்படி செய்தி வெளிவரும். ஆனால் அவருடன் நடித்த முதல் படத்திலேயே இப்படி வதந்தி பரவியது. இவ்வாறு பிரியாமணி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X