கொலைகாரியாக மாறும் பிரியாமணி… ‘கொட்டேஷன் கேங்’ படம் குறித்து சூப்பர் தகவல் !
சென்னை : இயக்குனர் விவேக் இயக்கத்தில் உருவாக உள்ள கொட்டோஷன் திரைப்படத்தில் நடிகை பிரியாமணி ஒப்பந்த கொலையாளியாக நடிக்க உள்ளார்.
Recommended Video
இப்படி ஒரு வித்தியாசமான திரைப்படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக கூறியுள்ளார்.
இப்படத்தில் விஷ்ணு வாரியர், சதீந்தர், அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கராந்தே , ஷெரீன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பு
அருண்விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பாக்ஸர் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ள விவேக் கொட்டேஷன் கேங் திரைப்படத்தை இயக்க உள்ளார், இப்படத்திற்கான பூஜை கடந்த டிசம்பர் மாதம் போடப்பட்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பாக்ஸர் படத்தை அடுத்து தொடங்கப்பட உள்ளது.

சாரா அர்ஜுன்
மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை சொல்லும் இப்படத்தில் முக்கியமான ரோலில் தெய்வத்திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுனு நடிக்க உள்ளார். இப்படம் மும்பை, ஆந்திரா, தமிழ்நாடு என பல இடங்களில் படமாக்கப்பட உள்ளது.

ஒப்பந்த கொலையாளி
இந்நிலையில் கொட்டேஷன் கேங் திரைப்படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது மிகுந்த உற்சாகமாக இருப்பதாக பிரியா மணி கூறியுள்ளார். சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், கேங் ஸ்டார் படம் என்பதால் தோற்றம், ஒப்பந்தனை குறித்து தற்போதே சிந்தித்து வருவதாகவும் பிரியாமணி கூறியுள்ளார். இப்படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் வெளியிடப்படும்.

நக்சலைட்
பல படங்களை கைவசம் வைத்துள்ள பிரியாமணி, அசுரன் தெலுங்கு ரீமேக் படமான 'நாரப்பா' படத்திலும், ராணா தகுபதி, சாய் பல்லவியின் 'விராட்டா பர்வம்' படத்தில் நக்சலைட்டாக நடித்துள்ளார். சயனைடு மோகன் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து வருகிறார் பிரியாமணி.


Click it and Unblock the Notifications











