அட்லீ மேல எனக்கு பயங்கர கோபம்.. கடைசி வரை என்ன ஏமாத்திட்டாரு.. பத்ரகாளியான பிரியாமணி!
சென்னை: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை பிரியாமணி கடைசி வரை அந்த விஷயத்தில் அட்லீ ஏமாற்றிவிட்டார் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முத்தழகு கதாபாத்திரத்தில் பருத்திவீரனில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மிரள வைத்தவர் நடிகை பிரியாமணி. ஏற்கனவே ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருந்தார்.

மீண்டும் ஷாருக்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தனக்கு தெரிய வந்த நிலையில் கேமியோ ரோலோ என்றுதான் நினைத்தேன். ஆனால் ஷாருக்கானின் டீமில் இருக்கும் ஒரு நபராக கூடவே நடிக்கும் வாய்ப்பு என்று தெரிந்ததும் மிகவும் சந்தோஷப்பட்டேன்.
அட்லீயுடன் வந்த ஆர்யா: அந்தப் படத்தை அட்லீ இயக்குகிறார் என்றதும் ஓகே பண்ணலாமே என கூறிவிட்டேன். ஜூம் காலில் அட்லி வந்தார் கூடவே ஆர்யாவும் வந்துவிட்டார். அட்லி என் நண்பன் தான் என அறிமுகம் செய்துவிட்டு ஆர்யா கிளம்பி விட்டார். அட்லீ சொன்ன கதையும் பிடித்து போன நிலையில் படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

பிரியாமணி ஜவான் படத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியானதுமே பலரும் இந்தப் படத்திலும் ஐட்டம் டான்ஸ் தான் ஆடப் போகிறார் என ட்ரோல் செய்தனர். ஆனால் நான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கொடுக்கப்பட்ட நல்ல கதாபாத்திரத்தை எந்த அளவுக்கு சிறப்பாக செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்துள்ளேன் என நினைக்கிறேன் என்றார்.
கடைசி வரை ஏமாற்றிய அட்லீ: இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் கேமியோ ரோலில் விஜய் நடிக்கப் போவதாகவும் தெலுங்கு வெர்ஷனில் அல்லு அர்ஜுன் நடிக்க போவதாகவும் பெரிய நியூஸ் கிளம்பியது. அதைப் பார்த்து எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக ஓடிப்போய் அட்லீயிடம் விஜய் சார் நடிக்கிறாரா என்று கேட்டேன் அவர் சிரித்துக் கொண்டே நடிக்க வைத்து விடலாமே என கூலாக பதில் அளித்தார்.

சார் விஜய் சார் நடித்தால் அவர் கூட எனக்கு ஒரு சின்ன சீன் வைத்து விடுங்கள் என்றேன். அதுக்கு என்ன பிரமாதமா பண்ணிடலாம் என மீண்டும் அட்லீ சிரித்துக்கொண்டே சொன்னார். நானும் கடைசிவரை விஜய் சார் மற்றும் அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் நடிப்பார்கள் அவர்களது கேமியோ இருக்கும் என ரசிகர்களைப் போலவே நம்பிக் கொண்டிருந்தேன், கடைசியில் அட்லீ என்னை ஏமாற்றிவிட்டார் என கலகலப்பாக அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











