ஆபாசமாக கேள்வி கேட்ட ரசிகர்…குடும்பத்தையே திட்டித்தீர்த்த பிரியாமணி !
சென்னை : பிரியாமணியின் புகைப்படத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர் ஒருவரை பிரியா மணி கடுமையாக தீட்டித் தீர்த்துள்ளார்.
பிரியா மணிசில ஆண்டுகளுக்கு முன் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் தற்போது அசுரன் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து வருகிறார்.

தேசிய விருது
இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் படத்தின் மூலம் தேசிய விருது பெற்று இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரியாமணி. இவர் ஒரு கனாக்காலம்,மலைக்கோட்டை,தோட்டா, ஆறுமும், நினைத்தாலே இனிக்கும், சாருலதா போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

நாராப்பா
தேசிய விருதுக்குப்பிறகு பிறகு பல படங்களில் நடித்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு எந்த படங்களும் பெயர் சொல்லவில்லை. இதனால், பிற மொழி படங்களில் அவர் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் தேசிய விருது பெற்ற அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாராப்பா படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படு கிளாமராக
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடந்த பிலிம் பேர் நிகழ்ச்சியில் கருப்பு நிற உடையில் கிளாமராக உடை அடைந்து பங்கேற்றார் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள், ஏராளமான கமெண்டுகள் வந்த நிலையில், பிரியாமணியின் தீவிர ரசிகர் ஒருவர் விவகாரமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதாவது நிர்வாண புகைப்படத்தை பதிவிடுங்கள் என ஆபாசமாக பேசியுள்ளார்.

நெத்தியடி பதில்
இந்த கமெண்டைப்பார்த்து கடுப்பான பிரியாமணி, முதலில் உங்க அம்மா மற்றும் சகோதரியை பதிவிடச் சொல்லுங்கள் அதன் பிறகு நான் பதிவிடுகிறேன் என பளீர் என்று பதிலளித்துள்ளார். இந்த பதிலை எதிர்பாராத ரசிகர் விட்டால் போதும் என்று சாரி மேடம் என்று கூறிவிட்டு ஓடியேவிட்டார். பிரியாவின் இந்த நெத்தியடி பதிலுக்கு ரசிர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











