Priyamani: லிப் லாக் மற்றும் உடலுறவு காட்சியில் நடிக்கவே மாட்டேன்.. பிரியாமணி சொன்ன விளக்கம்!
சென்னை: நடிகை பிரியாமணி 20 ஆண்டுகளாக சினிமாவில் பல்வேறு மொழிகளில் நடித்து வந்தாலும், இன்னமும் ஒரு முறை கூட லிப் லாக் மற்றும் உடலுறவு காட்சிகளில் நடித்ததே இல்லை என்றும் எப்போதுமே அப்படி நடிக்க மாட்டேன் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
2003ம் ஆண்டு தெலுங்கில் வெளியான எவரே அட்டகாடு படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியாமணி. அடுத்த ஆண்டு தமிழில் வெளியான கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான பிரியமாணி தேர்வு செய்து நடித்த படங்கள் பல தரமான படங்களாக அமைந்தன.

அது ஒரு கனாக்காலம், பருத்தி வீரன், நினைத்தாலே இனிக்கும், மலைக்கோட்டை, ராவணன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பருத்திவீரன் பிரியாமணி: பிரியாமணியின் நடிப்பை பருத்திவீரன் படத்தில் பார்த்த ரசிகர்கள் மிரண்டே போய் விட்டனர். கிளைமேக்ஸ் காட்சியில் பிரியாமணியை கெடுக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், பிரியாமணி ஆபாசமாக நடிக்கவில்லை.
சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்தில் முதலமைச்சர் கதாபாத்திரத்திலேயே நடித்து கலக்கி இருந்தார்.
ஃபேமிலிமேன் வெப்சீரிஸில்: ராஜ் மற்றும் டிகே இயக்கிய தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் ஹீரோயினாக 2 பாகங்களிலும் நடித்துள்ள பிரியாமணி ஆபாசக் காட்சிகளிலோ, லிப் லாக் முத்தக் காட்சிகளிலோ நடிக்கவில்லை.
தனது நண்பருடன் அவர் உடலுறவு வைத்துக் கொண்டாரா? இல்லையா? என்பதே இன்னமும் தெரியாத புதிராகவே பல ரசிகர்களை அடுத்த பார்ட்டிலாவது ராஜ் மற்றும் டிகே அந்த சீனுக்கான விளக்கத்தை கொடுப்பார்களா? என குழம்பி வருகின்றனர்.

லிப் லாக் காட்சிக்கு நோ: 20 ஆண்டுகள் சினிமாவில் நடித்து வரும் பிரியாமணி ஷாருக்கானின் ஜவான் மற்றும் அஜய் தேவ்கனின் மைதான் உள்ளிட்ட பெரிய படங்களிலும் நடித்து வருகிறார்.
ஆனால், இதுவரை ஆன்ஸ்க்ரீனில் லிப் லாக் மற்றும் உடலுறவு காட்சிகளில் நடித்ததே இல்லை என்றும் தனது கான்ட்ராக்டிலேயே தெளிவாக அதற்கு நோ சொல்லி விடுவேன் எனக் கூறியுள்ளார்.
எல்லாமே கணவருக்காக: கடந்த 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் பிரியாமணி. திருமணத்துக்கு முன்பாகவும் ஆபாசக் காட்சிகளிலும் லிப் லாக் முத்தக் காட்சிகளிலும் தான் நடிக்கவில்லை என்றும் திருமணத்துக்கு பிறகும் அப்படி நடிக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளேன். எல்லாமே என் கணவருக்காகத்தான் எனக் கூறியுள்ளார் பிரியாமணி.

சில படங்களில் அதுபோன்று நடிக்கச் சொன்னார்கள். ஆனால், நான் தெளிவாக மறுத்து விட்டேன். சில பட வாய்ப்புகளும் அதன் காரணமாகவே என்னை விட்டுச் சென்று விட்டது என்றும் கூறியுள்ளார். அதிகபட்சமாக கன்னத்தில் முத்தம் கொடுப்பதுடன் மட்டுமே நிறுத்திக் கொள்வேன். அதற்கு மேல் எல்லை மீற மாட்டேன் என பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











