தலைவி.. சசிகலாவாக நடிக்கும் பிரபல நடிகை.. செட்டே ஆகாதே.. இப்போதே புலம்ப ஆரம்பித்த நெட்டிசன்கள்!
தலைவி படத்தில் பிரியாமணி சசிகலா வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் பிரியாமணி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலர் ஒரே நேரத்தில் பல்வேறு பெயர்களில் படமாக்கி வருகின்றனர். அவர்களில் ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதற்காக அவர் பல்வேறு பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டார். ஆனால் சமீபத்தில் வெளியான தலைவி பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரது மேக்கப் ஜெயலலிதா போன்றே இல்லை என பரவலாக விமர்சனம் எழுந்தது. இது படக்குழுவை அதிருப்தி அடைய வைத்ததாகவும் ஒரு தகவல் வெளியானது.

மீண்டும் பிரியாமணி
இந்நிலையில் தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கண்களால் கைது செய் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான பிரியாமணி, பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்றவர்.

தமிழில் ரீஎண்ட்ரி
திருமணத்திற்குப் பிறகு தமிழில் படங்களில் எதிலும் பிரியாமணி நடிக்கவில்லை. மற்ற மொழிகளில் அவர் நடித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் அவர் நடுவராக பங்கேற்று வருகிறார். தலைவி படம் தமிழில் அவருக்கு நல்ல ரீஎண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி
தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். ஏற்கனவே கங்கணா, அரவிந்த்சாமி என நட்சத்திரப் பட்டாளமே உள்ள நிலையில், பிரியாமணியும் இப்படத்தில் இணைவதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

நெட்டிசன்கள் விமர்சனம்
ஆனால் இது ஒருபுறம் இருக்க, ஏற்கனவே ஜெயலலிதா வேடத்தில் கங்கணா நடிப்பதை ஜீரணிக்க இயலவில்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், ‘சசிகலா வேடத்தில் பிரியாமணியா, நிச்சயம் அவர் அந்த கதாபாத்திரத்திற்கு செட்டே ஆக மாட்டார். விஜய் ஏன் இப்படி கதாபாத்திரத்திற்கு பொருத்தமில்லாத ஆட்களாகத் தேர்வு செய்து வருகிறார்' என அவர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











