பாவனியை விடாது துரத்தும் அமீர்.. பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு காதல் கதையை உருவாக்கும் பிரியங்கா!
சென்னை: குறும்படம் போட்டு பாவனியை கமல் மற்றும் ரசிகர்கள் கழுவி ஊற்றி ஒரு வாரம் கூட ஆகவில்லை.
அடுத்த காதல் கதையில் அழகாக நடித்து வருகிறார் பாவனி என பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி தள்ளி வருகின்றனர்.
தொடர்ந்து அமீர் பாவனியை துரத்தி துரத்தி லவ் பண்ணும் காட்சிகளும் பிரியங்கா அமீருக்கு அக்கா வேலை பார்ப்பதும் என சென்று கொண்டிருக்க இன்றைய மூன்றாவது புரமோவிலும் அதே காலக் கொடுமை காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அபிநயை விரட்டி
பாவனி மற்றும் அபிநய் நெருங்கி பழகுவது பிடிக்காமல் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த உடனே டான்ஸ் மாஸ்டர் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார். நான் உன்னோட ஃபேன் பாவனி என ஆரம்பித்து, அபிநய்க்கு எதிராக அனைத்து காய்களையும் நகர்த்தி பாவனி பக்கத்தில் இருந்து அபிநயை விரட்டி அடித்து விட்டார்.

பாவனியுடன் நெருக்கம்
அபிநய் இருக்கும் போதே பாவனியை அடித்து விளையாடி அபிநயை ஒதுக்கிய அமீர் தற்போது அபிநய் அக்ஷரா உடன் பேச ஆரம்பித்ததும் பாவனியுடன் ரொம்பவே நெருக்கம் ஆகி விட்டார். வேறு எந்த பிரச்சனையும் பாவனிக்கு வரக்கூடாது என நண்பனாக இருக்காமல் பாவனியை காதலிப்பதாக தொடர்ந்து பேசி பிரச்சனைகளை உருவாக்கி வருகிறார்.

என்ன பிரியங்கா இதெல்லாம்
பிரியங்கா பிக் பாஸ் வீட்டில் அமீருக்கும் பாவனிக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து இப்போ ஒன்னு பண்றீங்களே அது கண்டிப்பா க்யூட்டாக இல்லை பதிலுக்கு வேறு ஒரு வேலையை நீங்க பார்த்து வறீங்க என நெட்டிசன்கள் நாக்கை புடுங்காத குறையாக கேட்டு வருகின்றனர்.

ஷையா இருக்காம்
அமீர் தன்னை துரத்தி துரத்தி காதலிப்பதை பார்த்து அதட்டாமல் எனக்கு ரொம்ப ஷையா இருக்கிறது என பாவனி பேசுவது ரசிகர்களை ரொம்பவே கடுப்பாக்கி உள்ளது. இப்போ உங்க வீட்டில் பார்க்க மாட்டாங்களா பாவனி அபிநய்க்கு ஒரு நியாயம் அமீருக்கு ஒரு நியாயமா என விளாசி வருகின்றனர்.

ஒரே பலியாடு
பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் சிக்கிய ஒரே பலியாடு பாவனி என்பதால் பிக் பாஸ் டீம் அவரை வைத்து நல்லா நாடகம் போட்டு வருகின்றனர். இந்த லவ் டிராக்குக்கு எப்போ தான் ஒரு எண்ட் கார்டு போடுவாங்க என்றும் ப்பா.. முடியல என்றும் நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்.

டபுள் எவிக்ஷன்
இந்த வாரம் அபிநய் மற்றும் பாவனி அல்லது அபிநய் மற்றும் அமீர் என டபுள் எவிக்ஷன் பண்ணி இருவரை வெளியே அனுப்பினால் தான் பிக் பாஸ் வீட்டில் வேறு ஏதாவது சுவாரஸ்யமாக இருக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்து வெறுத்து போய் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











