For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இம்போர்டட் நாய்.. பிரியங்காவை பங்கமாக கலாய்த்த அபிஷேக்.. எல்லாம் வருண் செய்த லீலை!

    |

    சென்னை: பஞ்ச தந்திர டாஸ்க்கில் நீர் காயினை சொந்தமாக்கிய வருண் பாத்ரூம் ஏரியாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார்.

    சக போட்டியாளர்கள் அனைவரும் பாத்ரூம் செல்ல வேண்டும் என்றால் தன்னிடம் அனுமதி வாங்கி விட்ட பிறகே செல்ல வேண்டும் என கண்டிஷன் போட்டார்.

    பாத்ரூம் போக வந்த பிரியங்காவை நாய் மாதிரி நடிக்க சொன்ன வருணிடம் அப்படியே நாயாகவே மாறி பிரியங்கா செய்த சேட்டைகள் ரசிக்கும் படியாக இருந்தது.

    இந்த வீட்டில் நாம தான் பவர்புல்… பக்கா பிளான் போட்ட பிரியங்கா !இந்த வீட்டில் நாம தான் பவர்புல்… பக்கா பிளான் போட்ட பிரியங்கா !

    அபியை விட்டு விலக வேண்டும்

    அபியை விட்டு விலக வேண்டும்

    பிரியங்கா தனக்கு இருக்கும் ரசிகர் வட்டத்தை அதிகரித்துக் கொள்ளாமல் அபிஷேக் ராஜாவுடன் இணைந்து அவரது ஆட்டத்திற்கு இரையாகி விட்டாரோ என்கிற கேள்வி தான் இன்னமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. அபிஷேக்கை விட்டு பிரியங்கா விலகினால் தான் அவர் கடைசி வரை இந்த கேமில் நீடிப்பார் என்றும் கருத்துக்கள் குவிகின்றன.

    அவசரத்த புரிஞ்சிக்கலையே

    அவசரத்த புரிஞ்சிக்கலையே

    அவசரமாக பாத்ரூம் வந்தாலும் அந்த ஏரியாவை நீர் காயின் கொண்டு ஆட்சி செய்து வரும் வருண் சொல்வதை எல்லாம் கேட்டு விட்டுத் தான் பெண் போட்டியாளர்கள் கூட பயன்படுத்த முடியும் என்கிற டாஸ்க்கை கொடுத்து படுத்தி எடுத்து விட்டார் பிக் பாஸ். வருணின் வலையில் வசமாக சிக்கியது பிரியங்கா தான்.

    Bigg Boss 5 Priyanka ஜெயிக்கணும் | Actor Dhiraviam Exclusive | Filmibeat Tamil
    தள்ளிப் போடா

    தள்ளிப் போடா

    எப்போதும் பிரியங்கா பின்னாடியே ஒட்டிக் கொண்டு நின்றால் தான் கேமராவில் தெரிவோம் என்பதை நன்றாக புரிந்து வைத்துக் கொண்ட அபிஷேக் பிரியங்கா பாத்ரூம் போக வரும் போது கூட அவருக்கு பின்னாடி ஒட்டிக் கொண்டு நின்றது எல்லாம் ரொம்பவே ஓவர். அதிலும், நாயாக நடிக்க முற்பட்ட பிரியங்கா டேய் தள்ளிப் போடா என அபிஷேக்கை சொல்லும் அளவுக்கு அபி நடந்து கொண்டது டூமச்.

    இம்போர்டட் நாய்

    இம்போர்டட் நாய்

    பிரியங்கா தள்ளிப் போக சொன்னதும் கடுப்பான அபிஷேக் போகும் போது பிரியங்கா நாயாக நடித்ததை பார்த்து இம்போர்டட் நாய் என பங்கமாக கலாய்த்து விட்டு அந்த இடத்தில் இருந்து விலகி அடுத்த நபரை இன்ஃப்ளூயன்ஸ் செய்ய புறப்பட்டு சென்று விட்டார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    நாயாகவே மாறிட்டாங்க

    நாயாகவே மாறிட்டாங்க

    பாத்ரூம் போய் ஆகணுமே என்ன பண்றது? வருண் சொன்னதை கேட்டு நாய் வேஷம் போட்ட பிரியங்கா தவழ்ந்து வந்து நாய் செய்யும் சேட்டையை எல்லாம் செய்து ரசிகர்களை கொஞ்சம் இந்த எபிசோடில் என்டர்டெயின் செய்தார். அத்துடன் பாத்ரூம் சீன் போதும் என பிக் பாஸ் அந்த டாஸ்க்கை முடித்து வைத்து விட்டார்.

    English summary
    Varun orders Priyanka to act like a dog for use bathroom after he turned leader in the bathroom area with his Water coin.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X