வெறும் டவல் மட்டுமே.. பாத்ரூமில் இருந்து வெளியேறிய ராஜு.. பிரியங்கா என்ன சொன்னாங்க தெரியுமா?
சென்னை: நீர் ஆற்றலை கொண்டு இந்த வாரம் வருண் பாத்ரூம் ஏரியாவை ஆட்சி செய்து வருகிறார்.
அவருக்கு அசிஸ்டென்ட்டாக பிரியங்காவை வருண் மாற்றிய நிலையில், எந்நேரமும் பாத்ரூம் ஏரியாவிலேயே டோக்கன் போடும் நபர் போல பிரியங்கா டூட்டி பார்த்து வருகிறார்.
இந்நிலையில், வெறும் டவல் மட்டுமே கட்டிக் கொண்டு ராஜு பாய் பாத்ரூமில் குளித்து விட்டு வெளியேற அவரை பார்த்து பிரியங்கா சொன்ன அந்த விஷயத்தை எல்லாம் அன்சீனில் போட்டு கடுப்பேற்றி வருகிறார் பிக் பாஸ் எடிட்டர் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அன்சீனில் செம ஃபன்
பிக் பாஸ் மெயின் எபிசோடை விட அன்சீனில் ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. சண்டை போட்டுக் கொள்ளும் காட்சிகளாக இல்லாமல் ஜாலியாக ஃபன் பண்ணும் காட்சிகள் பல அன்சீனில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் விஜய் மியூசிக் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை பிரபலப்படுத்தவே இப்படி விஜய் டிவி செய்து வருவதாக புலம்பி வருகின்றனர்.

இது வருண் வாரம்
நீர் காயினை கைவசம் வைத்துள்ள வருண் இந்த வாரம் நீரின் ஆளுமையை கொண்டு பாத்ரூம் ஏரியாவை ஆட்சி செய்து வருகிறார். பாத்ரூமில் பிரியங்கா குளித்துக் கொண்டு இருக்கையில் ஷவரில் இருந்து தண்ணீர் வராமல் நேற்று பயங்கரமாக கொடுமை படுத்தி விட்டார் வருண்.

வருணின் அசிஸ்டன்ட்
வருண் தனக்கு ஒரு அசிஸ்டன்ட் வேண்டும் என பிரியங்காவை தேர்வு செய்ய அப்பாடா இனிமேல் பாத்ரூம் பிரச்சனை நமக்கு இருக்காது என உடனடியாக ஓகே சொல்லி விட்டார் பிரியங்கா. அதன் காரணமாக எந்நேரமும் பாத்ரூமில் அவருடன் இருந்து டூட்டி பார்த்து வருகிறார்.

வெறும் டவல் உடன்
பிக் பாஸ் வீட்டில் ஏகப்பட்ட ஆண் போட்டியாளர்கள் தங்களின் சட்டையை கழட்டி விட்டு வெறும் உடம்பை காட்டிபடி அசால்ட்டாக சொந்த வீட்டில் இருப்பதை போலவே நடந்துள்ளனர். இந்நிலையில், பாத்ரூம் ஏரியாவில் ராஜு ஜெயமோகன் குளித்து விட்டு வெறும் டவல் மட்டுமே கட்டிக் கொண்டு வந்த காட்சி அன்சீனில் இடம்பெற்றுள்ளது.

பிரியங்கா என்ன சொன்னாங்க
ராஜு ஜெயமோகன் குளித்து விட்டு அரை நிர்வாண கோலத்தில் வெளியே வந்ததை வச்சுக் கண்ணு வாங்காமல் பார்த்த பிரியங்கா உங்களுக்கு இப்படி சட்டை இல்லாமல் இருப்பது Uncomfortable ஆக இருக்கா சார்.. எனக் கேட்க உங்களுக்கு Comfortable ஆ இருந்தா ஓகே என ராஜு சொல்ல, எனக்கு Comfortable தான் சார் என படு ஜாலியாக சொன்ன சீனை எல்லாம் ஏன் அன்சீனில் வைத்து மொக்கை சீன்களில் மெயின் எபிசோடில் காட்டுறீங்க என ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

வேட்டி அவுக்கணும்
துணி துவைக்கிற பவுடர் வைக்கப் போறேன்னு சொல்லிட்டு அந்த டப்பாவை வைக்க.. ரஜினி சார் குளிச்சிட்டு வந்துட்டாரு எதிரிகள் உட்கார்ந்து இருக்காங்க அடிப்பது போல மிமிக்ரி பண்ண சொல்லி கேட்க, வேட்டியெல்லாம் அவுக்கணுமே என டவலை கழட்டுவது போல ராஜு கை வைக்க அது மட்டும் வேணாம் சார் என பிரியங்கா படு கேஷுவலாக பேச ரஜினி சண்டை போடுவது போல இமிடேட் செய்து அந்த கோலத்திலேயே ராஜு பாய் அசத்தியது வேற லெவல்.


Click it and Unblock the Notifications











