தனுஷ் படத்திலிருந்து விலகிய பிரியங்கா மோகன்.. அவருக்கு பதில் யாரு தெரியுமா ?

சென்னை : தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்திலிருந்து பிரியங்கா மோகன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் உட்பட பலர் நடித்திருந்தனர். ஓடிடியில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட தனுஷ் தற்போது பாலிவுட், கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். தி ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ், ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் எவன்ஸ் நடித்த 'தி கிரே மேன்' திரைப்படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது.

கேப்டன் மில்லர்

கேப்டன் மில்லர்

மேலும், செல்வராகவனின் நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தனது மற்றொரு படமான திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் இதற்குமுன் ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

விலகிய பிரியங்கா மோகன்

விலகிய பிரியங்கா மோகன்

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பிரியங்கா மோகன் தற்போது ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருப்பதால், அவரது கால்ஷீட் கிடைக்காததால் அவர் இந்த படத்திலிருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி

இதனால், 18 வயதே ஆன நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X