கார்னர் பண்ணவங்க கன்னத்தில் பளார் விட்ட பிரியங்கா சோப்ரா.. மீரா சோப்ரா போட்ட சூப்பர் பதிவு!
மும்பை: பாலிவுட் திரையுலகத்தில் நெபோடிசம் சர்ச்சை தலைவிரித்து ஆடுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தான் ஏன் பாலிவுட்டை விட்டு நகர்ந்து சென்றேன் என்பது குறித்து அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் ஒரு கும்பல் வாரிசு நடிகர்களுக்கு மட்டுமே பாலிவுட் சொந்தம் என்பது போல செயல்பட்டு வருவதாக பிரியங்கா சோப்ராவின் பேச்சு புரிய வைப்பதாக பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், அன்பே ஆருயிரே படத்தில் நடித்த நடிகை மீரா சோப்ராவும் பிரியங்காவை ஆதரித்து பதிவிட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

பற்ற வைத்த பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டை விட்டு ஹாலிவுட்டுக்கு தான் ஏன் நகர்ந்து சென்றேன் என நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியது பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ராவுக்கே அங்கே இத்தனை தொல்லைகள் கொடுக்கப்பட்டு அவரை கார்னர் செய்தனரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் எழுப்பி வருகின்றனர்.

கங்கனா போட்ட போடு
பிரியங்கா சோப்ரா பற்ற வைத்த நெருப்பை கப்பென பிடித்துக் கொண்ட நடிகை கங்கனா ரனாவத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர் தான் பிரியங்கா சோப்ராவை பாலிவுட்டில் இருந்தே ஓரங்கட்டினார் என்றும் பல பட வாய்ப்புகள் பிரியங்கா சோப்ராவுக்கு கிடைக்காமல் பண்ண நிலையில் தான் அவர் பாலிவுட்டை விட்டு வெளியேறினார் என்றும் ட்வீட் போட்டுள்ளார்.

பிரியங்காவின் உறவினர்
கங்கனா ரனாவத்தின் ட்வீட்டை ஷேர் செய்த நடிகை மீரா சோப்ரா, பாலிவுட்டில் நிலவி வரும் நெப்போடிச சர்ச்சையை தன் பங்குக்கு எடுத்துச் சொல்லி தனது உறவுக்கார பெண்ணான பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே, அர்ஜுன் உடன் மருதமலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

அவுட்சைடர் அவுட்சைடர் தான்
கமல்ஹாசனையே பாலிவுட்டில் நிலைக்க விடாமல் செய்து விட்டதாக அப்பவே குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், இன்னமும் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் மட்டுமே அங்கே சம்பாதிக்க முடியும் என்றும் எவ்வளவு தான் சாதித்தாலும், அவுட்சைடர் அவுட்சைடர் தான் என்கிற நிலை பாலிவுட்டில் இன்னமும் நிலவி வருவதாக பெரும் போடாக போட்டிருக்கிறார் நடிகை மீரா சோப்ரா.

பளார் விட்ட பிரியங்கா
ஆனால், பிரியங்கா சோப்ரா முடங்கிப் போகாமல் ஹாலிவுட் நடிகையாக தன்னை உயர்த்திக் கொண்டு பாலிவுட்டில் அவரை கார்னர் செய்தவர்களின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டு இருக்கிறார் என அதிரடியாக தனது உறவினரான பிரியங்கா சோப்ராவை பாராட்டி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

சுஷாந்த் மரணம்
இதே பிரச்சனை காரணமாகத் தான் நடிகர் சுஷாந்த் சிங்கும் மனவேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல இளம் நடிகர்களை ஃபீல்ட் அவுட் செய்து தங்கள் பிள்ளைகளை திறமையான நடிகர்கள் என பாலிவுட்டில் சுற்ற வைத்து வருகின்றனர் என ஏகப்பட்ட கண்டனங்கள் தற்போது குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











