அட பிரியங்கா சோப்ராவும் அவரது கணவரும் செஞ்ச விஷயத்த பாருங்க.. ட்ரெண்டாகும் ஃபோட்டோ

சென்னை: நடிகை பிரியங்கா சோப்ரா தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் தொடர்ந்து ஹாலிவுட்டில் நடித்தார். அந்த சமயத்தில் பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரியங்காவைவிட ஜோனஸ் பத்து வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மால்டி என்ற மகள் இருக்கிறார். இந்தச் சூழலில் பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.

பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரியங்கா சோப்ரா. மாடலிங்கில் நுழைந்த அவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடந்த மிஸ் வேர்ல்ட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளரானார். அதிலிருந்து பிரியங்கா சோப்ராவின் மீது பலரது கவனம் விழுந்தது. மேலும் சினிமாவில் நுழைந்து பெரும் ரவுண்டு வருவார் என்றும் கணிக்கப்பட்டது.

Priyanka Chopra and Nick Jonas outing photos are trending

தமிழன் பிரியங்கா சோப்ரா: அதன்படி முதல்முதலாக விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தை கூடுதல் ஸ்டார் வேல்யூவுடன் கொடுக்க நினைத்த அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜிவி, மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்று சென்சேஷனலாக இருந்த பிரியங்காவை ஹீரோயினாக தேர்வு செய்தார். படம் சுமாரான ஹிட் என்றாலும் உலக அழகி நடித்திருக்கிறார் என்ற பெரும் விளம்பரம் அந்தப் படத்துக்கு பிரியங்கா சோப்ரா மூலம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் பிரியங்கா: கோலிவுட்டில்தான் தனது கரியரை ஆரம்பித்தாலும் அதன் பிறகு ஏதோ காரணங்களால் தமிழில் அவர் நடிக்கவே இல்லை. அவர் 2003ஆம் ஆண்டு தி ஹீரோ - லவ் ஸ்டோரி ஆஃப் தி ஸ்பை என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டடிக்க பாலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக முன்னணி நடிகையாக மாறினார் ப்ரியங்கா.

Priyanka Chopra and Nick Jonas outing photos are trending

பாலிவுட் டூ ஹாலிவுட்: பாலிவுட்டில் கலக்கிய ப்ரியங்கா சோப்ரா குவாண்ட்டிகோ என்ற தொடர் மூலம் ஹாலிவுட்டில் தடம் பதித்தார். அங்கும் தனது திறமையை அவர் நிரூபித்ததால் ஹாலிவுட்டில் செட்டில் ஆனார். மேலும் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அவர் கடைசியாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்தியாவிலிருந்து ஹாலிவுட் சென்று வெற்றிக்கொடி நாட்டிய வெகு சிலர்களில் பிரியங்கா முதன்மையானவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.

Priyanka Chopra and Nick Jonas outing photos are trending

மூன்று கோடி ரூபாய்: சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி வேறு வகையில் வருமானத்தை குவிக்கிறார் பிரியங்கா சோப்ரா. அதன்படி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஏதேனும் பிராண்டின் விளம்பரம் தொடர்பாக ஒரு போஸ்ட் போட மூன்று கோடி ரூபாய்வரை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு வருமானம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. அவர்கள் 160 ரூபாயில் ஒரு வீட்டையும் கட்டியிருக்கின்றனர்.

Priyanka Chopra and Nick Jonas outing photos are trending

சுற்றுலா: பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனஸும் தங்களது கரியரில் பிஸியாக இருந்தாலும் தங்களது மால்தியை கண்ணும் கருத்துமாக பார்த்துவருகின்றனர். இந்நிலையில் பிரியங்கா, நிக் ஜோனஸ், மால்தி ஆகிய மூன்று பேரும் சுற்றுலா சென்றிருக்கின்றனர். அதுதொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் நிக் ஜோனஸ் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X