சல்மான் படத்தில் இருந்து வெளியேறிய ப்ரியங்காவுக்கு அடித்தது ஜாக்பாட்
நியூயார்க்: சல்மான் கான் படத்தில் இருந்து வெளியேறிய ப்ரியங்கா சோப்ராவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
பாலிவுட்டுக்கு பிரேக் கொடுத்திருந்த ப்ரியங்கா சோப்ரா சல்மான் கானின் பாரத் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க விரும்பினார். ரூ. 13 கோடி சம்பளம் எல்லாம் பேசப்பட்ட பிறகு படத்தில் இருந்து வெளியேறிவிட்டார்.
அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததால் தான் வெளியேறியதாக கூறப்பட்டது.

ப்ரியங்கா
ப்ரியங்கா சோப்ராவுக்கு அவர் அப்பா என்றால் உயிர். அப்படிப்பட்ட அப்பா இறந்த சில நாட்களிலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டு படக்குழுவினரை ஆச்சரியப்பட்ட வைத்தவர் ப்ரியங்கா. அப்படிப்பட்டவர் நிச்சயதார்த்தம் நடந்ததற்காக படத்தில் இருந்து வெளியேறியதை நம்ப முடியவில்லை என்று வியந்தவர்களுக்கு உண்மையான காரணம் தெரிய வந்துள்ளது.

ஹாலிவுட்
கேம் ஆப் த்ரோன்ஸ் புகழ் மிஷல் மெக்லாரன் இயக்கும் ஹாலிவுட் படம் கவ்பாய் நிஞ்சா வைக்கிங். கிறிஸ் பிராட் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ப்ரியங்கா சோப்ரா. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தில் கிறிஸ் பிராட்டின் காதலியாக நடிக்கிறாராம் ப்ரியங்கா.

பாலிவுட்
ஹாலிவுட்டில் பெரிய படத்தில் ஒப்பந்தமாவதாக இருந்ததால் தான் ப்ரியங்கா சல்மான் கான் படத்தில் இருந்து வெளியேறியிருப்பார் என்று பேச்சு கிளம்பியுள்ளது. கவ்பாய் நிஞ்சா வைக்கிங் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 28ம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டில் கவனம் செலுத்துவதால் பாலிவுட் படத்தில் இருந்து நைசாக நழுவிவிட்டார் ப்ரியங்கா.

பே வாட்ச்
டிவி தொடரான குவான்டிகோ மூலம் ஹாலிவுட்டில் பிரபலமான ப்ரியங்கா சோப்ரா நடித்த முதல் ஆங்கில படம் பேவாட்ச். அதன் பிறகு அவர் எ கிட் லைக் ஜேக் படத்தில் நடித்தார். அவர் அடுத்ததாக இஸ் இன்டிட் ரொமான்டிக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் அவர் கவ்பாய் நிஞ்சா வைக்கிங் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











