பிரியங்கா சோப்ரா பின்னாடி ஆறரை கோடி பேர் இருக்காங்க.. ஆசியாவிலேயே இவர் தான் இன்ஸ்டாவில் டாப்பாம்!

சென்னை: ஆசிய சினிமா பிரபலங்களிலேயே இன்ஸ்டாகிராமில் முன்னிலை இடத்தை பிடித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

65 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள இவர் மற்ற அனைத்து இந்திய சினிமா பிரபலங்களையும் பின்னுக்குத் தள்ளி இருக்கிறார்.

இவர் வெளியிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் விளம்பர போஸ்ட்டுக்கும் பல கோடி ரூபாய்கள் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

கோலிவுட் டு ஹாலிவுட்

கோலிவுட் டு ஹாலிவுட்

நடிகர் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. பூஜா ஹெக்டேவை போல இவருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக மாறிய இவர், தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

ஆறரை கோடி பேர்

ஆறரை கோடி பேர்

என் பின்னாடி ஆறரை கோடி பேர் இருக்காங்க என இனி தைரியமாக நடிகை பிரியங்கா சோப்ரா காலரை தூக்கிவிட்டு சொல்லலாம். நடிகை பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 65.3 மில்லியன் ரசிகர்கள் உலகளவில் பின் தொடர்கின்றனர். மேலும், ஆசியாவிலேயே அம்மணி தான் சினிமா பிரபலங்களில் டாப்பாம்.

தீபிகா, ஷாருக்கானை விட

தீபிகா, ஷாருக்கானை விட

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான தீபிகா படுகோனே, கரீனா கபூர், ஷாருக்கான், சல்மான் கான், திஷா பதானி என பலரையும் ஓவர் டேக் செய்துவிட்டு 65 மில்லியன் ரசிகர்களுடன் கெத்துக் காட்டுகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தது தான் உலகளாவிய ரசிகர்கள் பிரியங்காவை ஃபாலோ பண்ண உதவியதாக கூறப்படுகிறது.

Recommended Video

Instagram மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் | Virat Kohli 19வது இடம்
இரண்டாவது இடத்தில்

இரண்டாவது இடத்தில்

பிரியங்கா சோப்ரா அளவுக்கு ஹாலிவுட் படங்கள் எதிலும் நடிக்காத நடிகை ஷ்ரத்தா கபூர் 63 மில்லியன் ரசிகர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து தீபிகா படுகோன் 57.5 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகை ஆலியா பட்டுக்கு 53.9 மில்லியனும் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு 51 மில்லியன் ரசிகர்களும் உள்ளனர்.

ஒரு போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா

ஒரு போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா

நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிடும் ஒரு விளம்பர போஸ்ட்டுக்கு அவருக்கு 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3 கோடி வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இப்படி சம்பாதித்தால் நியூயார்க்கில் என்ன நிலவில் கூட ரெஸ்டரன்ட் ஆரம்பிக்கலாம்.

விராட் கோலி வேற லெவல்

விராட் கோலி வேற லெவல்

சினிமா பிரபலங்களில் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தை பிடித்தாலும் இந்திய பிரபலங்களில் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி தான் முதலிடம். 133 மில்லியன் ரசிகர்களுடன் டாப்பில் உள்ளார். அதாவது 13 கோடி பேர் விராத் கோலியை பின் தொடர்கின்றனர். ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பர போஸ்ட்டுக்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக விராத் கோலி வாங்குகிறாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X