மோடி ஏமாற்றியதாக புகார் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

By Vignesh Selvaraj

Recommended Video

மோடி மீது கார் கொடுத்த பிரியங்கா சோப்ரா!

மும்பை : நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை. இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்திய வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் பிரியங்கா விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், பிரியங்கா சோப்ரா நீரவ் மோடி மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீரவ் மோடி

நீரவ் மோடி

நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் வைர வியாபாரி நீரவ் மோடி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அவரை போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடி நடத்தி வரும் வைர நகை ஜுவல்லரிக்கு கடந்த 2017 ஜனவரி முதல் விளம்பரத் தூதுவராக பணியாற்றியுள்ளார். மோசடி கும்பல் என தெரிந்ததும் அவர்களுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா புகார்

பிரியங்கா சோப்ரா புகார்

நீரவ் மோடி டைமண்ட் ஜூவல்லரியின் விளம்பர மாடலாக இருந்ததற்காக பிரியங்காவுக்கு கோடிக் கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடிய விஷயம் அறிந்ததும் அவரது கடை விளம்பரத்தில் நடித்ததற்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டார் என்று அவர் மீது பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்துள்ளார்.

பாலிவுட்டில் பரபரப்பு

பாலிவுட்டில் பரபரப்பு

நீரவ் மோடி மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு, அவரை சி.பி.ஐ தேடிவரும் நிலையில் அவர் மீது பிரியங்கா சோப்ரா புகார் கூறியிருப்பதும், வழக்கு தொடர்ந்திருப்பதும் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் பலரும்

இன்னும் பலரும்

நிலுவையில் உள்ள தனக்கு வரவேண்டிய சம்பள தொகையை உடனடியாக கேட்டு மனு கொடுத்துள்ளார் பிரியங்கா. இவர் மட்டுமல்லாமல் சித்தார்த் மல்ஹோத்ரா, லிசா ஹைடன் என பலரும் இதில் மாட்டிக்கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X