twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய மங்கை... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்!

    |

    இஸ்ரேல் : 2021ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சந்திற்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து கூறியுள்ளார்.

    Recommended Video

    Miss Universe 2021 Title Winner Harnaaz Sandhu | Harnaaz Sandhu Crowning Moment

    70வது மிஸ் யூனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது.

    இதில், அர்ஜென்டினா, பிரேசில், சீனா, பிரான்ஸ்,இத்தாலி , இந்தியா , இஸ்ரேல் என 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    நானே வருவேன்... அடுத்தடுத்து விலகும் கேமிராமேன்கள்...என்ன தான் நடக்குது ? நானே வருவேன்... அடுத்தடுத்து விலகும் கேமிராமேன்கள்...என்ன தான் நடக்குது ?

    ஹர்னாஸ் சந்து

    ஹர்னாஸ் சந்து

    இதில், பராகுவேயின் நாடியா ஃபெரீரா மற்றும் தென்னாப்பிரிக்காவின் லலேலா மஸ்வானே ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 2021ம் ஆண்டுக்கான மிஸ் யூனிவர்ஸ் கிரீடத்தை 21 வயதான ஹர்னாஸ் சந்து வென்றார். இஸ்ரேலின் ஈலாட்டில் உள்ள யுனிவர்ஸ் டோமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 79 போட்டியாளர்களை ஹர்னாஸ் தோற்கடித்து வெற்றி பெற்று மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை பெற்றார். அவருக்கு மெக்சிகோவைச் சேர்ந்த மிஸ் யுனிவர்ஸ் 2020 ஆண்ட்ரியா மெசா அவருக்கு கிரீடத்தை வழங்கினார். பராகுவே நாட்டைச் சேர்ந்த நதியா ஃபெரீரா இரண்டாவது ரன்னர் அப் மிஸ் பட்டத்தை வென்றார்.

    பல அழகி பட்டம்

    பல அழகி பட்டம்

    17 வயதில் தனது மாடலிங் பணியை தொடங்கிய ஹர்னாஸ் சந்து, 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பல விருதுகளை குவித்துள்ளார்.

    பிரியங்கா சோப்ரா

    பிரியங்கா சோப்ரா

    21 ஆண்டுகளுக்கு பிறகு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்துவிற்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், புதிய பிரபஞ்ச அழகி... மிஸ் இந்தியா. வாழ்த்துகள் ஹர்னாஸ் சந்து... 21 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீடத்தை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார் என்ற தலைப்பில் ஹர்னாஸ் மிஸ் யுனிவர்ஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட தருணத்தின் வீடியோவை பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ளார்.

    பிரபலங்கள் வாழ்த்து

    பிரபலங்கள் வாழ்த்து

    இதற்கு முன் 2000 ஆம் ஆண்டில் உ.பி யின் லாராதத்தா மிஸ் யுனிவர்சாக இருந்துள்ளார். லாராதத்தா உலக அழகியாக பட்டம் வென்ற ஆண்டு பிறந்த ஹர்னாஸ் சந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். ஹர்னாஸ் சந்துக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இணையத்திலும், அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    21 ஆண்டுகளுக்கு பிறகு

    21 ஆண்டுகளுக்கு பிறகு

    21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்றுள்ளார். இதற்கு முன் 2000ஆவது ஆண்டில் லாரா தத்தா வென்றார். அதற்கு முன் சுஸ்மிதா சென் இந்தப் பட்டத்தை 1994ல் வென்றிருந்தார். எனவே மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மூன்றாவது இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஹர்னாஸ் சந்து.

    English summary
    Priyanka Chopra congratulated Miss Universe 2021 winner Harnaaz Sandhu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X