லாக்டவுன் விதிகளை மீறி சலூன் விசிட்.. பிரியங்காவுக்கு போலீஸ் எச்சரிக்கையா? நடிகை இப்படி சொல்றாரே?

By

லண்டன்: கொரோனா விதிமுறைகளை மீறி எதையும் செய்யவில்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய்யுடன் தமிழன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர், நடிகர் நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

டெக்ஸ்ட் ஃபார் யூ

டெக்ஸ்ட் ஃபார் யூ

அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா சோப்ரா, டெக்ஸ்ட் ஃபார் யூ (Text For You) என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஜிம் ஸ்ட்ரூஸ் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங், லண்டனில் நடந்து வருகிறது. இதற்காக தனது கணவர் நிக் ஜோனாஸ், அம்மா மது சோப்ரா ஆகியோருடன் அங்கு சென்றுள்ளார்.

புதிய கொரோனா

புதிய கொரோனா

இங்கிலாந்தில் இப்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால், நாடு முழுவதும் மூன்றாவது முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும், தண்டனைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

லாக்டவுன் விதிகள்

லாக்டவுன் விதிகள்

ஊரடங்கு விதிகளின்படி, சலூன், ஸ்பா, மால்கள் முடப்பட்டுள்ளன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் நடிகை பிரியங்கா தனது அம்மா மற்றும் செல்ல நாயுடன், பிரபல சிகை அலங்கார நிபுணர் ஜோஷ் வூட்டின், சலூனுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து லாக்டவுன் விதிகளை மீறியதாக, பிரியங்கா சோப்ராவை போலீசார் எச்சரித்தனர்.

பிரியங்கா மறுப்பு

பிரியங்கா மறுப்பு

சலூன் உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததாக லண்டன் மீடியாவில் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இதை, நடிகை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார். 'படப்பிடிப்பு தொடர அங்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக, ஹேர் கலரிங் செய்வதற்காக போலீஸ் அனுமதி பெற்றே அவர் சென்றார்.

விதிமீறல் இல்லை

விதிமீறல் இல்லை

அதில் தொடர்புடையவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு, வழிகாட்டு விதிமுறைகள் சரியாகக் கடைபிடிக்கப்பட்டது. இதில் விதிமீறல் ஏதும் நடக்கவில்லை' என்று நடிகை பிரியங்கா சோப்ராவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X