சத்தமில்லாமல் புதிய அவதாரம் எடுக்கும் பிரியங்கா...இந்த துறையையும் விட்டு வைக்கல போல
நியூயார்க் : உலக அழகி பட்டம் வென்ற பிறகு தமிழில் விஜய்யுடன் நடித்த தமிழன் படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக தன்னை உயர்த்திக் கொண்ட பிரியங்கா, பிறகு ஹாலிவுட்டிலும் மிகப் பெரிய நடிகையானார்.

சமீப காலமாக தனது திரையுலக பயணத்தை, புத்தகமாக அவர் எழுதி வருகிறார். இதில் தன்னுடன் பணியாற்றியவர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பற்றியும் வெளிப்படையாக, சுயசரிதையாக எழுதி வருகிறார். தற்போது புதிய துறை ஒன்றிலும் தடம் பதிக்க தயாராகி வருகிறார்.

நியூயார்க் நகரில் ரெஸ்டாரென்ட் ஒன்றை துவக்க ஏற்பாடு செய்து வருகிறார் பிரியங்கா. இது பற்றிய அறிவிப்பை நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பிரியங்கா, ரெஸ்டாரென்ட் துவங்குவதற்காக நடத்தப்பட்ட சிறிய பூஜை ஒன்றின் போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நியூயார்க்கில் சோனா னெ்ற பெயரில் ரெஸ்டாரென்ட் துவங்க உள்ளேன். இந்திய உணவு பிரியர்களுக்காக இந்த மாத இறுதியில் சோனா திறக்கப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சோனா ரெஸ்டாரென்ட் ஆரம்ப பணிகளை துவக்குவதற்காக நடத்தப்பட்ட பூஜை படங்கள். அவை 2019 செப்டம்பரில் எடுக்கப்பட்டவை. காலியாக இருந்த இந்த இடம் கடவுள் அருளால் வேகமாக சோனா நியூயார்க் ஆக மாறி உள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











