பிரியங்கா சோப்ரா நிச்சயதார்த்த பார்ட்டி! டின்னரில் என்னென்ன ஸ்பெஷல்?
பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் நிச்சயதார்த்த பார்ட்டி இன்று நடைபெறுகிறது.
Recommended Video

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் நிச்சயதார்த்த பார்ட்டி விழா இன்று நடைபெறுகிறது. இதில் மாப்பிள்ளைக்கு பிடித்தாற் போல் டின்னர் மெனு தயார் செய்யப்பட்டுள்ளதாம்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸும் காதலித்து வந்தனர். நிக் ஜோன்ஸ் பிரியங்காவுக்காக இரண்டு லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஸ்பெஷலான நிச்சயதார்த்த வைர மோதிரத்தை பரிசளித்திருந்தார்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர்களின் நிச்சயதார்த்த விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

இரவு
இன்று மாலை மும்பையில் உள்ள பீசி பங்களாவில் சிறப்பு பூஜை மற்றும் ரோக்கா என்ற திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற உள்ளன. அதன்பிறகு நட்சத்திர விடுதியில் நிச்சயதார்த்த விழா நடைபெறுகிறது.

மஞ்சள் கலர்
பிரியங்கா சோப்ராவின் உறவினரான பர்ணித்தி சோப்ரா காலையிலேயே வந்துவிட்டார். மஞ்சள் நிற உடையில் அங்கு வந்து கவனத்தை ஈர்த்தார். ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் அங்கு சங்கமிக்கும் எனத் தெரிகிறது. ரன்வீர் சிங், கரண் ஜோகர், ரவீனா டாண்டன் மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர்.

பிரைவேட்
இந்த நிகழ்வு மேற்கத்திய பாணியில் நடைபெற இருக்கிறது. பிரியங்காவும் நிக் ஜோன்ஸும் மேற்கத்திய கலாச்சார உடையில் தோன்ற உள்ளனர். இருவரும், இந்த நிகழ்வை மிகவும் பிரைவேட்டாக நடத்த திட்டமிட்டுள்ளதால், ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை.

டின்னர் ஸ்பெஷல்
தால் மக்கனி மற்றும் பட்டர் சிக்கனை ருசித்த நிக் ஜோன்ஸுக்கு அது மிகவும் பிடித்துவிட்டதாம். அதனால், டின்னரைப் பொருத்தவரை இந்தியன் மற்றும் காண்டினெண்டல் வகை உணவுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











