ரகசியமாக திருமணம் செய்து கொண்டேனா?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்
மும்பை: தனக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா.
ஹாலிவுட்டில் அசத்தி வரும் ப்ரியங்கா சோப்ரா இந்தியா வந்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்ற அவர் தனி விமானத்தில் பயணம் செய்தபோது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் அவர் கையில் தாலி இருந்ததால் அவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்ற பேச்சு கிளம்பியது.

விளக்கம்
ப்ரியங்காவுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாக ரசிகர்கள் பேசியது அவரின் காதுகளையும் எட்டியுள்ளது. இதையடுத்து திருமணம் குறித்த உண்மையை ட்விட்டரில் தெரியப்படுத்தியுள்ளார் ப்ரியங்கா.
தாலி
தான் கையில் கட்டியிருந்தது திருஷ்டி கழிக்கும் பாசி, தாலி இல்லை என்றும் தனக்கு திருமணம் நடந்தால் அது ரகசியமாக நடக்காது என்றும் ப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.

பாலிவுட்
3 ஆண்டுகள் கழித்து பாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். சல்மான் மற்றும் அலி அப்பாஸ் ஜாபருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்றுவதை மிகவும் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிஹு
அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள சுபர்ன பிரபா மகளிர் பள்ளிக்கு சென்ற ப்ரியங்கா சோப்ரா மாணவிகளுடன் சேர்ந்து பிஹு நடனம் ஆடினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலானது. அஸ்ஸாம் மாநில பிராண்ட் அம்பாசிடர் ப்ரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











