முறுகலான தோசை.. பானி பூரி.. சொந்த ரெஸ்டரன்டில் ரசித்து ருசித்து சாப்பிட்ட பிரியங்கா சோப்ரா!

மும்பை: பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டில் கலக்கி வரும் பிரியங்கா சோப்ரா தோசை மற்றும் பானி பூரியை ருசித்து ரசித்து சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்திய நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தனது சொந்த ரெஸ்டரன்டான சோனாவிற்கு ஒருவழியாக வந்து விட்டேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவிலேயே ஹால்ட்

அமெரிக்காவிலேயே ஹால்ட்

மும்பையில் இருப்பதை விட அதிகப்படியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் வசித்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. மேட்ரிக்ஸ் 4ம் பாகத்திலும் இவர் நடித்து வரும் நிலையில், மும்பை பக்கம் எப்போதாவது தான் எட்டிப் பார்க்கிறார்.

சொந்த ரெஸ்டரன்ட்

சொந்த ரெஸ்டரன்ட்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடிகை பிரியங்கா சோப்ரா ஆரம்பித்த சோனா உணவகத்துக்கு ஒரு வழியாக வந்து விட்டேன் என மகிழ்ச்சி பொங்க இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டுத் தாக்கி உள்ளார். ரெஸ்டரன்ட் திறக்கும் போது லண்டனில் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் பிரியங்கா சோப்ரா கலந்து கொள்ளவில்லை.

கணவர் சொன்ன பெயர்

கணவர் சொன்ன பெயர்

சோனா எனும் பெயரையே பிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் நிக் ஜோனஸ் தான் பரிந்துரை செய்தாராம். சோனா என்றால் தங்கம் என கேள்விப் பட்டிருக்கேன். அதையே வைத்து விடலாமா என அவர் கேட்டதும் பிரியங்கா மறுப்பேதும் சொல்லாமல் ஓகே என்று சொல்லி உள்ளார்.

முறுகலான தோசை

முறுகலான தோசை

தனது நெடுநாள் கணவான ரெஸ்டரன்ட் பிசினஸை இதுவரை நேரில் வந்து கூட பார்க்க முடியாமல் போய்விட்டேன் என மிகவும் வருந்திய பிரியங்கா சோப்ரா, சமையல் அறைக்கு சென்று தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தனக்காக உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் டின்னரையும் பிரியங்கா சோப்ரா நண்பர்களுடன் இணைந்து சாப்பிட்டுள்ளார். இந்திய உணவான முறுகலான தோசை தான் அதில் ஹைலைட்டே.

பானிப்பூரி சாப்பிட்ட பிரியங்கா

பானிப்பூரி சாப்பிட்ட பிரியங்கா

இறால், பக்கோராஸ், கோல்கப்பாஸ் உள்ளிட்ட உணவுகளுடன் பானிப்பூரியையும் ரசித்து ருசித்து பிரியங்கா சோப்ரா சாப்பிடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து பல பிரபலங்களின் வயிறுகளை பசியெடுக்க வைத்துள்ளார். ஏகப்பட்ட பிரபலங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளைக்கே அங்கே சாப்பிட வந்துடுறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X