அது வேற வாய், இது வேற வாய்: சர்ச்சையில் சிக்கிய புதுப்பெண் ப்ரியங்கா சோப்ரா
Recommended Video

ஜோத்பூர்: காசை கரியாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது சிறியவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
டிசம்பர் 1ம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும், நேற்று இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.

அம்மா
சங்கீத் நிகழ்ச்சியில் நிக் ஜோனஸே பாடினார். அந்த நிகழ்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா தனது அம்மா மதுவுடன் சேர்ந்து நடனமாடினார். அம்மாவும், மகளும் சேர்ந்து ஆடியதை பார்க்க அழகாக இருந்தது.

ப்ரியங்கா
ப்ரியங்கா சோப்ரா தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால் முகேஷ் அம்பானி தனது மனைவி நீத்தா, மகள் இஷாவுடன் ப்ரியங்காவின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நீத்தாவும், இஷாவும் ப்ரியங்காவுடன் சேர்ந்து நடனம் ஆடினார்கள்.

அழைப்பு இல்லை
ப்ரியங்காவின் திருமண நிகழ்ச்சிக்கு பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு இல்லை. சல்மான் கானின் தங்கை அர்பிதா மட்டும் தனது மகன் அஹிலுடன் வந்திருந்தார். அர்பிதா ப்ரியங்காவுக்கு ரொம்ப நெருக்கமானவர் என்பதால் அவரை மட்டும் அழைத்தார் அவர்.

புகைப்படங்கள்
ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் சங்கீத் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. நிக் ஜோனஸ் வீட்டார் இந்திய பாரம்பரிய உடை அணிந்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பட்டாசு
ப்ரியங்கா சோப்ரா நிக் ஜோனஸின் வயது வித்தியாசத்தை வைத்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் தற்போது அதை மறந்துவிட்டார்கள். காரணம் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட ப்ரியங்கா தனது திருமண நிகழ்ச்சியில் வானவேடிக்கைக்கு ஏற்பாடு செய்தது பற்றி தான் நெட்டிசன்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பேசட்டும்
தீபாவளிக்கு ஊர் உலகத்திற்கு அறிவுரை வழங்கிவிட்டு திருமணத்தில் வானவேடிக்கை வெடித்தால் மக்கள் நிச்சயம் விளாசுவார்கள் என்பது ப்ரியாங்காவுக்கு கண்டிப்பாக தெரியும். அட இப்படியும் டாக் ஆப் தி டவுனாக இருக்கலாம் என்று நினைத்துவிட்டாரோ?


Click it and Unblock the Notifications











