5 நிமிஷம் டான்ஸ் ஆட ரூ. 5 கோடி வாங்கிய நடிகை ப்ரியங்கா சோப்ரா
Recommended Video

மும்பை: விருது விழா ஒன்றில் 5 நிமிடம் நடனமாட பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுக்கு ரூ. 5 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. பாலிவுட் பிரபலங்கள் விருது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார்கள்.
ஜீ சினி அவார்ட்ஸ் 2018 விழா நடைபெற உள்ளது.
இந்த விருது விழாவில் பாலிவுட் பிரபலங்கள் பலர் நடனமாடுகிறார்கள்.

ஷாஹித் கபூர்
பாலிவுட் ஹீரோக்கள் ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, நடிகைகள் கத்ரீனா கைஃப், ஜாக்குலின், பூமி பட்னேகர் உள்ளிட்டோர் விருது விழாவில் நடனமாட உள்ளனர்.

ரூ. 5 கோடி
விருது விழாவின் கடை நிகழ்ச்சியாக ப்ரியங்கா சோப்ராவின் நடனம் இடம்பெற உள்ளது. 5 நிமிடம் மேடையில் ஆட ப்ரியங்காவுக்கு ரூ. 5 கோடி அளிக்கப்பட்டுள்ளதாம்.

சம்பளம்
ஜீ விழாவை தவிர ப்ரியங்கா வேறு எங்கும் நடனமாட ஒப்புக் கொள்ளவில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ரூ. 5 கோடி தர சம்மதித்ததாலேயே நடனமாட சரியென்றாராம் ப்ரியங்கா.

பாலிவுட்
பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக உள்ள ப்ரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். அதனால் அவருக்கான மவுசு அதிகரித்துள்ளது. இதையடுத்தே அவர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார்.


Click it and Unblock the Notifications











