அமேசானுடன் இணையும் பிரியங்கா சோப்ரா..2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் !
மும்பை : அமேசான் நிறுவனத்துடன் இணைந்து நடன நிகழ்ச்சி மற்றும் இணையத் தொடர்களில் நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகி உள்ளார்.
ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் மிகப் பிரபலமாக நடித்துக் கொண்டு வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா.
இவர் தற்போது பிரபலமான அமேசான் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய ப்ராஜக்ட் பணியாற்றுவதாக செய்திகள் வந்துக்கொண்டு இருக்கின்றன.

தயாரிப்பாளர்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருந்துவரும் பிரியங்கா சோப்ரா இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்து, பாலிவுட் திரைபட உலகில் உச்ச நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தேசிய விருதுகள்
இவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான பர்பிள் பெப்பல் பிக்சர்ஸ் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து வந்த நிலையில் பானி மற்றும் வென்டிலேட்டர் படங்களுக்கு தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. இவர் தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமானார் பிரியங்கா சோப்ரா.

புதிய ப்ராஜக்ட்
நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றியுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது, ஆங்கிலப்படங்கள் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகப்புகழ் பெற்றார். தற்போது, ஆன்லைனில் மிகவும் பிரபலமான அமேசான் உடன் இணைந்து, புதிய ப்ராஜக்ட்களில் இணையவிருக்கிறார் என்ற செய்தி பரவிக்கொண்டு இருக்கின்றது .

கலைஞர்களையும் தேடி
சமீபத்தில் பப்ளிகேஷன் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிரியங்கா சோப்ரா இந்த அமேசான் ஒப்பந்தம் மூலம் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளையும் அதை உருவாக்கக்கூடிய கலைஞர்களையும் தேடிச் செல்வதாகவும், ஹிந்தி, ஆங்கிலம் என எந்த ஒரு மொழியாக இருந்தாலும் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கணவர் நிக் ஜோன்ஸ்
இவ்வாறு அமேசான் உடன் 2 ப்ராஜக்ட்களில் இணைந்து பணியாற்ற உள்ள ப்ரியங்கா சோப்ரா அதில் ஒன்று தனது கணவர் நிக் ஜோன்ஸ் உடன் இணைந்து ரியாலிட்டி டான்ஸ் ஷோ ஒன்றிலும், மற்றொன்று பிரபலமான மார்வெல்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர்களான ஆண்டனி மற்றும் ஜோ ரூஸ்ஸோ போன்றோருடன் இணைந்து பணியாற்ற உள்ள ப்ராஜெக்ட்டான பெயர் சிடாடெல் என வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். இது இரண்டு ஆண்டுகளுக்கு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்பை ட்ராமா
கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் மற்றும் பாடிகார்ட் போன்ற படங்களில் நடித்திருந்த ரிச்சர்ட் மாடன் உடன் நடிக்கவிருக்கும் இந்த படம் ஒரு ஸ்பை ட்ராமா கலந்த படமாக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் பிரியங்கா சோப்ரா அமேசான் ஸ்டூடியோவுடன் ஷீலா என்ற ட்ராமாவில் மா ஆனந்த் ஷீலாவாக நடிக்க விருக்கிறார்.

சூப்பர் ஹீரோ
இது தவிர நெட்ப்ளிக்ஸிலும் இரண்டு தொடர்களில் நடிக்கவிருக்கிறார். வி கேன் பி ஹீரோஸ் என்ற சூப்பர் ஹீரோ தொடரிலும், தி வைட் டைகர் என்ற தொடரில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்து வந்த தி மேட்ரிக்ஸ் 4 படப்பிடிப்பு கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்காக அவரது ரசிகர்களும் காத்து கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











