அட்லீ படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடி இவரா?.. ஹாலிவுட்டில் இருந்து டோலிவுட் தாவிட்டாரா?
ஹைதராபாத்: விஜய்யின் தமிழன் படத்தில் நடித்து கோலிவுட்டில் அறிமுகமான நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் கலக்கினார். ஆனால், அங்கே ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக அங்கிருந்து அப்படியே ஹாலிவுட் பக்கம் சென்றார். மேட்ரிக்ஸ் 4ம் பாகம் வரை நடித்த அவருக்கு சமீப காலமாக அங்கேயும் பட வாய்ப்புகள் குறைய மீண்டும் இந்தியாவை நோக்கி படையெடுத்துள்ளார்.
இந்தி சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் SSMB 29 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. 42 வயதாகும் நடிகை பிரியங்கா சோப்ரா மகேஷ் பாபுவை தொடர்ந்து தற்போது 42 வயதாகும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அடுத்தடுத்து டோலிவுட் படங்களில் பிரியங்கா சோப்ரா கமிட் ஆக என்ன காரணம் என்கிற கேள்விகளும் ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த அவருக்கு திடீரென என்ன ஆனது என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.
விஜய் முதல் மகேஷ் பாபு வரை: விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா பாலிவுட் நடிகையாக மாறி ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஹ்ரித்திக் ரோஷன், சன்னி தியோல், ஜான் ஆபிரகாம், அபிஷேக் பச்சன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். 2016ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பிரியங்கா சோப்ராவுக்கு டுவைன் ஜான்சன் நடிப்பில் வெளியான பே வாட்ச் எனும் ஹாலிவுட் படத்தில் வில்லி வேடம் கிடைத்தது. தொடர்ந்து ஹாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா திடீரென மீண்டும் இந்தியா திரும்பினார். தற்போது ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுன் ஜோடியா?: ராஜமெளலியை தொடர்ந்து டாப் இயக்குநராக இருக்கும் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கப்போகும் படத்திலும் பிரியங்கா சோப்ரா தான் ஹீரோயின் என டோலிவுட்டில் தற்போது பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன. ராஜமெளலி படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்து அதகளம் செய்து வருகிறாராம் பிரியங்கா சோப்ரா. தெலுங்கிலும் நயன்தாராவை அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அட்லீ மாற்றுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். கூடிய விரைவிலேயே அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.
டோலிவுட் தான் டாப்: ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா 42 வயதை கடந்த நிலையில், மீண்டும் இந்தியா பக்கம் திரும்பியுள்ளார் என்றும் பாலிவுட்டை விட தற்போது டோலிவுட் தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால், அங்கே நடித்தால் தான் அதிக சம்பளத்தை அள்ள முடியும் என்கிற முடிவோடு தான் பிரியங்கா சோப்ரா டோலிவுட் பக்கம் சென்றிருக்கலாம் என்றும் கூறுகின்றனர். அல்லு அர்ஜுன் படத்தில் பிரியங்கா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டால் அவருக்கு சம்பளம் மட்டுமே 30 முதல் 40 கோடி வரை வரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











