பிரியங்காவின் நல்ல மனசு... வெளிநாட்டில் இறந்த உதவியாளர் உடலை தாயகம் கொண்டு வர உதவி

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா தனது உதவியாளரின் இறந்த உடலை அமெரிக்காவிலிருந்து தாயகம் கொண்டு வரும் நடவடிக்கையில் அமெரிக்காவில் முகாமிட்டபடி செய்து வருகிறாராம் நடிகை பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா படப்பிடிப்புக்காக அமெரிக்கா போயிருந்தார். அவருடன் அவரது உதவியாளர் ஜிபன் பத்ராவும் போயிருந்தார். அவர் பெவர்லி ஹில்ஸ் ஹோட்டலில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலை தாயகம் கொண்டு வர பிரியங்கா சோப்ரா உதவவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஆனால் பிரியங்காதான் பத்ரா உடலை தாயகம் கொண்டு வர உதவினார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அதில் கூறுகையில், இது எதிர்பாராத ஒரு சம்பவம், மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பத்ரா குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பிரியங்கா தலைமையில்...

பிரியங்கா தலைமையில்...

பத்ராவின் உடலை தாயகத்திற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரியங்கா செய்தார் என்பதே உண்மை. வெளிநாடு என்பதால் பத்ராவின் குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லை.

ஏன் தாமதம்?

ஏன் தாமதம்?

கையெழுத்து போடுவது உள்ளிட்ட பல்வேறு ஆவண வேலைகளில் தாமதம் ஏற்பட்டது. இதனால்தான் பத்ராவின் உடலைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.

பயணம் தள்ளிப்போனது...

பயணம் தள்ளிப்போனது...

பத்ராவின் உடலைக் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டதால் பிரியங்கா சோப்ராவும் தனது இந்திய பயணத்தை தள்ளிப் போட நேரிட்டது. தொடர்ந்து பத்ரா குடும்பத்துடன் தொடர்பில்உள்ளோம்.

நேரடி பார்வையில்...

நேரடி பார்வையில்...

பத்ராவின் உடலைக் கொண்டு வருவது தொடர்பான பணிகளை பிரியங்காவே நேரடியாக கையளுகிறார். இதற்காக அவர் லாஸ் ஏஞ்சலஸிலேயே முகாமிட்டுள்ளார் என்று கூறியுள்ளார் அவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X