ராம் லீலாவில் ரசிகர்களை கிரங்கடிக்க வரும் பிரியங்கா சோப்ரா
மும்பை: சஞ்சய் லீலா பன்சாலியின் ராம் லீலா படத்தில் பிரியங்கா சோப்ரா குத்தாட்டம் போடுகிறார்.
சஞ்சய் லீலா பன்சாலி எடுத்துள்ள படம் ராம் லீலா. இதில் ரன்வீர் சிங்கும் , தீபிகா படுகோனேவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் குத்துப் பாடல் ஒன்றுக்கு ஆடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் அந்த வாய்ப்பை பிரியங்கா சோப்ரா பெற்றார்.

பிலிம் சிட்டியில் ஷூட்
குத்தாட்டப் பாடலின் ஷூட்டிங் மும்பையில் உள்ள பிலிம் சிட்டி ஸ்டுடியோஸில் நடந்தது.

ஜன்ஜீர்
பிரியங்கா ஜன்ஜீர் மற்றும் ஷூட் அவுட் அட் வாதாலா படங்களிலும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

ரோமியோ-ஜூலியட்
ராம் லீலா படம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் நாடகத்தின் தழுவல் ஆகும்.

ஹீரோவுக்கு டெங்கு
ரன்வீர் சிங் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications