மஞ்சள் தாவணியில் கணவர் முன் எக்குத்தப்பான ஆட்டம்! இணையத்தை கிரங்கடிக்கும் பிரியங்கா சோப்ரா வீடியோ
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா இன்று அதாவது ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஆண்டில் இருந்தே திட்டங்கள் தீட்டப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருமணக் கொண்டாட்டம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இருந்தே உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெறும் திருமண விழா தொடர்பான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்தபடி உள்ளது. மகாராஸ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் நடைபெறுகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் தங்களது இளைய மகனின் திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அதாவது, உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் தனது இளைய மகனின் திருமணத்தினை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். தனது மகனின் திருமணத்திற்காக மட்டும் பல லட்சக்கணக்கான கோடிகளை அம்பானி செலவழித்து வருகின்றார். மேலும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் வீட்டுக் கல்யாணம் என்பதால் இந்தியாவில் உள்ள அனைத்து பிரபலங்களுக்கும் அழைப்பு சென்றுள்ளது.

பிரியங்கா சோப்ரா : இதனால் சினிமா பிரபலங்கள் தொடங்கி கிரிக்கெட் வீரர்- வீராங்கனைகள் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தெல்லாம் இந்த நிகழ்ச்சிக்காக இந்தியா திரும்பிக் கொண்டு உள்ளனர். குறிப்பாக ஷாருக்கான் வெளிநாட்டில் நடந்து கொண்டு இருந்த தனது படப்பிடிப்பினை நிறுத்தி விட்டு வந்துள்ளார். அதேபோல் அமெரிக்காவில் செட்டில் ஆகி, தற்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்த பிரியங்கா சோப்ராவும் தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனது கணவர் நிக் ஜோன்ஸ் உடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்துள்ளார்.
குத்தாட்டம்: திருமணத்தில் கலந்து கொண்டது மட்டும் இல்லாமல் குத்து பாடல் ஒன்றிக்கு நடனமாடியுள்ளார். மஞ்சள் நிற தாவணியில் குத்தாட்டம் போட்டுள்ளார். இது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. திருமணத்தில் கலந்து கொள்ள தனது கணவருடன் வந்தபோதே, இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தது. தாவணியில் செம கிளாமராக இருக்கின்றார் என கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் அவரது நடன வீடியோ இணையத்தை மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்கள் மத்தியிலும் காட்டுத்தீயாக பரவி வருகின்றது.

சூப்பர் ஸ்டார்: அதேபோல் திருமணத்தில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணமகன் ஆனந்த் அம்பானியுடன் இணைந்து நடனமாடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். இவருடன் பாலிவுட் நடிகர் அனில் கபூரும் நடனமாடினார்.


Click it and Unblock the Notifications











