இதுல கூடவா காப்பி? ஜெனிபர் லோபஸை காப்பியடித்த பிரியங்கா சோப்ரா

ஜெனிபர் லோபஸ் அணிந்த ஆடையை பிரியங்கா சோப்ரா அணிந்துள்ளார்

சென்னை: பிரியங்கா நிக் ஜோனஸ் ஜோடி ஹாலிவுட் பிரபலத்தை காப்பியடித்துள்ளனர்.

ஆதி மனிதன் காபி குடிக்க ஆரம்பித்த காலத்திற்கு முன்பிருந்தே இந்த காப்பி அடிக்கும் கலாச்சாரம் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

ஒரு திரைப்படத்தைப் பார்த்து மற்றொரு திரைப்படம் எடுப்பது, வேற்று மொழி திரைப்படக் கதையைத் திருடி இது நானே சுட்ட தோசை என தம்பட்டம் அடிப்பது போன்ற நிகழ்வுகள் சினிமாவில் சகஜம்தான்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நடிகர்கள் புதிதாக ஒரு ஸ்டைலை உருவாக்கினால் அதை ரசிகர்கள் பின்பற்றுவர். அதை காப்பி என்று சொல்லிட முடியாது. ஆனால் ஒரு நடிகரின் ஆடை அலங்காரத்தை மற்ற நடிகர் பின்பற்றினால் அதை என்னவென்று சொல்வது? அதைத் தான் பிரியங்காவும் நிக் ஜோனஸும் செய்துள்ளனர்.

லார்ப் லாரன்

லார்ப் லாரன்

பிரபல ஆடைத் தயாரிப்பு நிறுவனமான லார்ப் லாரனின் ஐம்பதாவது ஆண்டுவிழா சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்றது. அதில் பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். காதல் கிளிகளான பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோனசும் கலந்து கொண்டனர். அவர்கள் அணிந்திருந்த ஆடை அனைவரின் கண்களையும் கவர்ந்திழுத்தது.

நிக் பிரியங்கா ஜோடி

நிக் பிரியங்கா ஜோடி

பிரியங்கா லார்ப் லாரனின் AW17 கலெக்‌ஷனிலிருந்து, காலிலிருந்து கழுத்துவரை கவர் செய்யப்பட்ட கருப்பு வெள்ளை நிற ஃபிராக்கிலும், நிக் ஜோனஸ், கருப்பு நிற பேண்ட், வெள்ளை சட்டை, வெள்ளை கோட், கருப்பு நிற பவ் என்று ஜோடியாக கலக்கினர்.

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ்

இந்த காம்பினேஷனை எங்கேயோ பார்த்த மாதிரி உள்ளதே என பலருக்கும் பொறிதட்ட, ஆங்.. அது ஹாலிவுட் நடிகை ஜெனிஃபர் லோபஸும், அலெக்ஸ் ரோடிக்ரூஸும் இதேபோன்ற ஆடையை வேனிட்டி ஃபேர் போட்டோ ஷூட்டுக்காக ஏற்கனவே அணிந்துள்ளனர் என ஞாபகத்திற்கு வந்தது.

ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டதுகூட ஓகே.. ஆனா அவங்களமாதிரியே போஸும் குடுத்துருக்காங்க. பாருங்களேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X