ஆசிய போட்டியில் தங்கம், பாக்ஸ் ஆபீஸில் சிங்கம்: மேரி கோம்
மும்பை: மேரி கோம் இந்தி படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
குத்துச் சண்டை வீராங்கனையான மேரி கோமின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் அதே பெயரில் படமானது. படத்தில் மேரி கோமாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். தனது கதாபாத்திரத்தில் பிரியங்கா பொருத்தமாக உள்ளார் என்று மேரியே தெரிவித்திருந்தார்.
படம் ரிலீஸான முதல் வார இறுதியில் ரூ.8 கோடி வசூல் செய்தது.

கான்கள்
கான்கள் ஆதிக்கம் செய்யும் பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில் மேரி கோம் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ரூ.50 கோடி
படம் ரிலீஸான இரண்டு வாரங்களில் ரூ. 50 கோடி வசூல் செய்தது. இதனால் பிரியங்கா சோப்ரா பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

ரூ.100 கோடி
கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸான மேரி கோம் உலக அளவில் தற்போது ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இரட்டை மகிழ்ச்சி
மேரி கோம் தற்போது இரட்டை மகிழ்ச்சியில் உள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றதும், தனது பெயரிலான படம் ரூ.100 கோடி வசூல் செய்ததும் அவருக்கு இரட்டை மகிழ்ச்சி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











