ப்ரியங்கா ஒரு ஏமாற்று நடிகை, நிக்கை காதலிக்கவில்லை: வெறுப்பை கக்கிய யு.எஸ். இணையதளம்
மும்பை: ப்ரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்று நடிகை, நிக் ஜோனஸை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் என்று அமெரிக்காவை சேர்ந்த இணையதளம் செய்தி வெளியிட்டு பிரபலங்களிடம் திட்டு வாங்கியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த செய்தி இணையதளம் தி கல்ட். அதில் மரியா ஸ்மித் என்பவர் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் பற்றி செய்தி வெளியிட்டார்.
அநத் செய்தியில் அவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தார்.

ப்ரியங்கா சோப்ரா
ப்ரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்று நடிகை. நிக் ஜோனஸை அவர் விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். நிக்-ப்ரியங்கா இடையேயான காதல் உண்மை இல்லை. ஹாலிவுட்டில் கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை திருமணம் செய்துள்ளார் என்று மரியா விளாசியிருந்தார்.
திட்டு
ப்ரியங்கா சோப்ராவின் கணவர் நிக்கின் சகோதரரை திருமணம் செய்யப் போகும் சோபி டர்னர் கல்ட் இணையதளத்தில் வெளியான செய்தியை பார்த்து கோபம் அடைந்து அதை ட்விட்டரில் விளாசியுள்ளார்.
சோனம் கபூர்
ப்ரியங்கா சோப்ரா பற்றிய செய்தியை பார்த்த நடிகை சோனம் கபூர் அந்த இணையதளம் மற்றும் செய்தியை எழுதியவரையும் நன்றாக விளாசி ட்வீட் போட்டுள்ளார்.

செய்தி நீக்கம்
உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களும், சாதாரண மக்களும் திட்டுவதை பார்த்த பிறகு ப்ரியங்கா பற்றிய செய்தியை நீக்கிவிட்டது அந்த இணையதளம். தி கல்ட் பிரபலமான இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











