விழாவில் நச்சென லிப் லாக்... கணவர் உதட்டில் ஒட்டிய லிப்ஸ்டிக்... துடைத்தபடி வெட்கப்பட்ட பிரியங்கா

By

Recommended Video

Golden globes 2020 | Priyanka Chopra Nick Jones | Lip Lock in Red Carpet

லாஸ் ஏஞ்சல்ஸ் : விருது விழாவில் கணவருக்கு நடிகை பிரியங்கா சோப்ரா கொடுத்த லிப்லாக் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

77-வது கோல்டன் குளோப் விருது விழா, அமெரிக்காவில் இன்று காலை நடைபெற்றது. ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸுடன் விழாவில் பங்கேற்றார். பிங்க் நிற ஸ்ட்ராப்லெஸ் மாடர்ன் கவுனில் அவர் பங்கேற்றார். இதில் 1917 என்ற படம் சிறந்த படத்துக்கான விருதை தட்டிச் சென்றது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

இதன் இயக்குனர் சாம் மென்டஸ் சிறந்த இயக்குனருக்கான விருதை பெற்றார். ஜூடி படத்திற்காக ரெனி ஸெல்வேஜர் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை பெற்றார். ஜோக்கர் என்ற படத்திற்காக, ஜோக்கின் ஃபோனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

ரெடியானார் நிக்

ரெடியானார் நிக்

இந்த விழா தொடங்குவதற்கு முன், சிவப்புக் கம்பள வரவேற்பில் வந்த நிக் ஜோனாஸிடம், இருவரும் முத்தம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது. ரெடியானார் நிக். ஆனால், முகத்தைப் பின்னுக்கு இழுத்தார் பிரியங்கா. காரணம் லிப்ஸ்டிக்.

ஒட்டியது லிப்ஸ்டிக்

ஒட்டியது லிப்ஸ்டிக்

பிறகு ஓர் அவசர முத்தம் கொடுத்தார் நிக்குக்கு. ஆனால், அவரது லிப்ஸ்டிக், நிக்கின் உதட்டில் ஒட்டி, சிவப்பாக மாறிவிட்டது. உடனடியாக, அவர் உதட்டை துடைத்துவிட்டபடி, வெட்கச் சிரிப்புடன் உள்ளே சென்றார் பிரியங்கா. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X