மும்பையில் களைகட்டும் பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி..!!
நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி இன்று நடைபெறுகிறது.
Recommended Video

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ராவின் நிச்சயதார்த்த பார்ட்டி இன்று நடைபெறுகிறது. இதற்காக தனது குடும்பத்துடன் நேற்றிரவு மும்பை வந்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரை பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் சென்று வரவேற்றார்.
பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகையான பிரியங்கா, ஹாலிவுட் படங்கள் சீரியல்கள் என படு பிசியானார்.
அப்போதுதான் தன்னைவிட 10 வயது குறைவான பாப் சிங்கரும் ஹாலிவுட் நடிகருமான நிக் ஜோனாஸ் உடன் பிரியங்காவுக்கு காதல் மலர்ந்தது.

கடந்த மாதம் நிச்சயதார்த்தம்
இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தாரும் பச்சைக்கொடி காட்டியதை அடுத்து கடந்த ஜூலை மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்தின் போது பிரியங்காவுக்கு வருங்கால கணவரான நிக் 2 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் விலையுயர்ந்த வைர மோதிரம் அணிவித்ததாக கூறப்பட்டது.

மும்பையில் பார்ட்டி
இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த பார்ட்டி மும்பை ஜுஹூவில் உள்ள பிரியங்கா சோப்ராவின் வீட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மாப்பிள்ளை நிக் ஜோனாஸ் தனது குடும்பத்துடன் நேற்று மும்பை வந்தார்.

சிலருக்கு மட்டுமே அழைப்பு
அவர்களை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். இன்று நடைபெற்று வரும் நிச்சயதார்த்த விருந்துக்கு வெகு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
200 அறைகள்
நிச்சயதார்த்த விருந்தால் பிரியங்கா சோப்ராவின் வீடு களைகட்டியுள்ளது. மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் விருந்தினர்களுக்காக 200 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரபலங்கள் பங்கேற்பு
இந்த பார்ட்டியில் ரன்வீர் சிங், கரன் ஜோகர், ரவீனா டன்டன், ஜபாரியா ஜோடி, மணீஷ் மல்ஹோத்ரா, பாடகர் சோஃபி சவுத்ரி ஆகியோர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் பிரியங்கா-நிக் நிச்சயதார்த்த பார்ட்டி நிகழ்ச்சியில் பங்ககேற்கவுள்ளார் என கூறப்படுகிறது. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரியங்காவும் நிக்கும் ஜோடியாக கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











