பிரபல நடிகைக்கு பொது இடத்தில் லிப்லாக் கொடுத்த கணவர்.. அருகில் இருந்த ஆண் செய்த அதிர்ச்சி சம்பவம்!
பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் லிப்லாக் முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
பாரீஸ் : பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் ஒரு பாடல் நிகழ்ச்சிக்கு இடையே உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்துக்கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் வாழ்க்கையை ரசித்து, ருசித்து வாழ்ந்து வருகிறார்கள்.
பிரியங்காவும், நிக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிக்கு சேர்ந்தே தான் செல்கிறார்கள். இதனால் இருவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகின்றன.

இசை நிகழ்ச்சி
அதுபோல் தான் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நிக் ஜோனாசும் அவரது சகோதரர் கேவினும் சமீபத்தில் பாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நடுவே, பாடகர்கள் அனைவரும் மேடையில் இருந்து கீழிறங்கி பார்வையாளர்கள் மத்தியில் சென்றனர்.

வீடியோ
அப்போது கேவின் தனது மனைவி டேனியிலுக்கு உதட்டில் முத்தம் கொடுத்துவிட்டு கடந்து சென்றார். அவருக்கு அடுத்து வந்த நிக், தனது மனைவி பிரியங்காவுக்கு லிப்டுலிப் முத்தம் கொடுத்தார். இந்த வீடியோவை பிரியங்கா, நிக் ஜோனாஸ் ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அதிர்ச்சி
இவர்கள் இரண்டு பேருக்கு அடுத்து வந்த ஜோ எனும் பாடகரின் மனைவி நிகழ்ச்சிக்கு வரவில்லை. இதனால் பிரியங்கா அருகில் நின்றிருந்த ஒரு ஆணுக்கு அவர் முத்தம் கொடுக்க சென்றார். இதனால் அவர் ஷாக்கானார்.
வைரல் வீடியோ
பிரியங்காவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இவர்களது வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே பலமுறை வைரலாகியுள்ளது. சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சிக்கு அரைக்குறையாக ஆடை அணிந்து வந்து, பிரியங்கா நெளிந்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











