மகேஷ் பாபு படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின் இல்லையா?.. ராஜமெளலியின் சீக்ரெட் எப்படி கசிந்தது?

ஹைதராபாத்: மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்குநர் ராஜமெளலி பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகைகளை களமிறக்கப் போகிறார் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதன் பின்னர் பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கி வரும் பிரியங்கா சோப்ராவை ராஜமெளலி ஆன்போர்ட் செய்தது போட்டோக்களுடன் லீக்கானது.

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போகிறார் என்றதுமே ரசிகர்கள் இன்பதிர்ச்சி அடைந்தனர். ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட்டை நடிக்க வைத்திருந்தார் ராஜமெளலி.

rajamouli priyanka chopra mahesh babu

தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் பிரியங்கா சோப்ரா நடித்து வரும் நிலையில், மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்தால் உலகளவில் படத்தை பிசினஸ் செய்ய ஏதுவாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருதினர். இந்நிலையில், மகேஷ் பாபுவுக்கு பிரியங்கா சோப்ரா ஜோடி இல்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

ராஜபார்ட் ராஜமெளலி: இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநராக ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி. இந்தியா சார்பில் ஆர்ஆர்ஆர் படம் தேர்வு செய்யப்படாத நிலையிலும் தனியாக அந்த படத்தை அனுப்பி சிறந்த இசை மற்றும் பாடல் பிரிவுகளில் ஆஸ்கர் விருதையும் அள்ளி வந்தார். இந்நிலையில், அவரது அடுத்த படத்தின் மீது உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

rajamouli priyanka chopra mahesh babu

மகேஷ் பாபுவுக்கு கிடைத்த மகுடம்: டோலிவுட்டில் பிரபாஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என பல நடிகர்களை பான் இந்தியா ஹீரோவாக மாற்றியுள்ள ராஜமெளலி அடுத்ததாக மகேஷ் பாபுவை பான் வேர்ல்ட் ஹீரோவாக்கும் திட்டத்தில் பிரம்மாண்டமாக புதிய படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்துக்காக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து மகேஷ் பாபு நடிக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

rajamouli priyanka chopra mahesh babu

பிரியங்கா சோப்ரா ஜோடி இல்லை: மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பிரியங்கா சோப்ரா மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கப் போவதில்லை என்றும் இந்த படத்தில் அவர் மிரட்டல் வில்லியாக நடிக்கப் போகிறார் என்கிற டாப் சீக்ரெட் லீக் ஆகியிருப்பது படக்குழுவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரியங்கா சோப்ரா ஹீரோயின் இல்லை என்றால் மகேஷ் பாபுவுக்கு அப்போ யாரு ஹீரோயின் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கண்டிப்பாக ராஜமெளலியின் ஷூட்டிங் ஸ்பாட் டீமில் இருந்து தான் இந்த ரகசியம் கசிந்திருக்கும் என்றும் பாதுகாப்பை அவர் இன்னமும் பலப்படுத்த வேண்டும் என மகேஷ் பாபு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X