மார்பகங்களை பெரிதாக்க சொன்ன இயக்குநர்.. சுயசரிதையில் ரகசியங்களை அம்பலப்படுத்திய பிரியங்கா சோப்ரா!

மும்பை: சர்வதேச நடிகையாக வலம் வரும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா தனது சுயசரிதையில் ஏகப்பட்ட ரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

அதில், இயக்குநர் ஒருவர் தனது மார்பகங்களை பெரிதாக்க வேண்டும் எனக் கூறியது தன்னை மிகவும் காயப்படுத்தியதாக குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

மேலும், தனக்கு நேர்ந்த காஸ்டிங் கோச் அனுபவங்களையும் தனது வாழ்க்கை சுவாரஸ்யங்களையும் அன்ஃபினிஷ்ட் புத்தகத்தில் எழுதி உள்ளார்.

அன்ஃபினிஷ்ட் புத்தகம்

அன்ஃபினிஷ்ட் புத்தகம்

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். 38 வயதாகும் நடிகை பிரியங்கா சோப்ரா, Memoir Unfinished எனும் டைட்டிலில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். விரைவில் அந்த புத்தகம் வெளியாகவிருக்கிறது.

மார்பகங்களை பெரிதாக்கணும்

மார்பகங்களை பெரிதாக்கணும்

2000 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற பிறகு பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக இயக்குநர் ஒருவரை சந்தித்த நிலையில், தன்னை அவர் சுழல சொன்னார் என்றும், அவர் சொன்னது போல நானும் சுழன்றேன். பின்னர் உங்க மார்பகங்களை பெரிதாக்கணும், பின்னழகை இன்னும் மெருகேற்றணும், தாடையையும் சரி செய்தாகணும் என்றதும் ஷாக்கானேன்.

வெளிநாட்டு மருத்துவர்

வெளிநாட்டு மருத்துவர்

வெளிநாட்டில் எனக்கு தெரிந்த ஒரு மருத்துவ நண்பர் உள்ளார் என்றும் அவரிடம் உங்களை காட்டி பட்டி டிங்கரிங் பார்க்க வேண்டும் என்பது போல சொன்னது என்னை ரொம்பவே கடுப்பேற்றியது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த இடத்தில் இருந்து சத்தமே காட்டாமல் வெளியேறி விட்டேன் என்றும் தனது சுய சரிதையில் பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

அது தெரியணும்

அது தெரியணும்

இன்னொரு பெரிய வெடிகுண்டையும் இந்த புத்தகத்தில் பிரியங்கா எழுதியுள்ளார். சல்மான் கான் உடன் ஒரு பாடலில் செம செக்ஸியாக நடனமாட இயக்குநர் ஒருவர் சொன்னார் என்றும், ஒவ்வொரு ஆடைகளாக கழட்டி எறியவும் சொன்னார். அதற்கு கூடுதலான ஆடைகளை அணிந்து கொள்கிறேன் என தனது ஆடை வடிவமைப்பாளரை வைத்து பேசிய போது, என்ன வேணா பண்ணிக் கோங்க கடைசியா நீங்க போட்டுருக்க 'ஜட்டி' தெரியணும், அதை பார்க்கத் தானே ரசிகர்கள் தியேட்டருக்கு வராங்க என்றார்.

விலகி விட்டேன்

விலகி விட்டேன்

அடுத்த நாளே அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என தனது சுயசரிதையில் கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, நானும் கிளாமரா பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால், அந்த இயக்குநர் பேசிய அந்த டோன், நடிகைகளை இழிவாக பார்க்கும் அந்த எண்ணம் தான் அந்த படத்தில் இருந்து என்னை விலக செய்ததுஅடுத்த நாளே அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என தனது சுயசரிதையில் கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, நானும் கிளாமரா பல படங்களில் நடித்துள்ளேன். ஆனால், அந்த இயக்குநர் பேசிய அந்த டோன், நடிகைகளை இழிவாக பார்க்கும் அந்த எண்ணம் தான் அந்த படத்தில் இருந்து என்னை விலக செய்தது என்றும் விளக்கி உள்ளார். என்றும் விளக்கி உள்ளார்.

10ம் வகுப்பு காதலர்

10ம் வகுப்பு காதலர்

மேலும், 10ம் வகுப்பு படிக்கும் போது பாப் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) எனும் பையனை தான் முதன் முதலாக காதலித்ததாகவும் இண்டியனாபோலிஸில் உள்ள அத்தை வீட்டில் தங்கி படிக்கும் போது, ஒரு நாள் யாருமில்லாத நேரத்தில் பாபை வீட்டுக்கு அழைத்து வந்த போது அத்தையிடம் மாட்டிக் கொண்டோம், பின்னர் பாப் வேறு ஒரு பெண்ணுடன் டேட்டிங் போனதும் பாப் உடனான காதல் முடிவுக்கு வந்தது என பல விசயங்களையும் விவகாரங்களையும் பிரியங்கா வெளிச்சப்படுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X