ராஜமெளலி படத்தில் ஆலியா பட்டுக்கு பதிலாக பிரியங்கா சோப்ராவா.. என்ன சொல்கிறது படக்குழு?
சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் நெப்போடிசம் பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது.
Recommended Video
அதன் காரணமாக சமீபத்தில் வெளியான நடிகை ஆலியா பட்டின் சடக் 2 டிரைலர் உலகிலேயே அதிக டிஸ்லைக்குகள் பெற்ற ட்ரைலராக மாறி உள்ளது.
ரசிகர்களின் இந்த கடும் எதிர்ப்பு காரணமாக ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஆலியா பட்டுக்கு பதிலாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார் என்ற தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

ராஜமெளலி படம்
பாகுபலி படங்களை தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். பான் இந்திய படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நாயகர்களாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வருகின்றனர். நாயகியாக ஆலியா பட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவரது போர்ஷன் இன்னும் தொடங்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

எதிர்க்க என்ன காரணம்
பாலிவுட் ரசிகர்கள், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பிறகு, ஆலியா பட்டின் சடக் 2 படத்துக்கு தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மகேஷ் பட் இயக்கத்தில் உருவாகி உள்ளதும், அந்த படத்தில் நடிக்க வேண்டிய சுஷாந்த் சிங் ராஜ்புத் நீக்கப்பட்டு ஆதித்யா ராய் கபூர் சேர்க்கப்பட்டது என சடக் 2 எதிர்ப்புக்கு பல காரணங்கள் உள்ளன.

இயக்குநருக்கு அழுத்தம்
இந்நிலையில், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் பல பிரம்மாண்ட படங்களின் நிலை என்ன? என்ற மிகப்பெரிய கேள்வி சினிமா உலகில் எழுந்துள்ளது. இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இருந்து நடிகை ஆலியா பட்டை நீக்க வேண்டும் என்றும், அவர் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் வதந்திகள் வைரலாகின்றன.

பிரியங்கா சோப்ரா
மேலும், ஆலியா பட் நீக்கப்பட்டு அந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார் என்கிற லேட்டஸ்ட் தகவல் ஒன்றும் தீயாய் பரவி வருகிறது. ஆலியா பட் காட்சிகள் இன்னும் படமாக்கப்படாததால், படக்குழு நிச்சயம் இந்த மாற்றத்துக்கு சம்மதிக்கும் என்ற பேச்சு பாலிவுட்டில் அடிபட்டு வருகிறது.

படக்குழு திட்டவட்டம்
தனக்கு பதிலாக பிரியங்கா சோப்ரா நடிக்கப் போகிறார் என்பது முற்றிலும் வதந்தி என பாலிவுட் ஹங்காமாவுக்கு கொடுத்த பேட்டியில் ஆலியா பட் மனம் திறந்துள்ளார். இயக்குநர் ராஜமெளலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஆலியா பட்டை நீக்கும் முடிவுக்கு வரவில்லை என்றும், ஆலியா பட் இந்த படத்திற்கு நிச்சயம் தேவை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்
ஆலியா பட் மட்டுமே இந்த படத்தை லீடு செய்யப் போவதில்லை என்றும், டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆருக்கு இருக்கும் ரசிகர்கள் பின்புலம் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்யும் என்றும், ஆலியா பட் ஒரு பகுதி மட்டுமே என்பதால், சடக் 2 மற்றும் ஆலியா பட் நடிக்கும் பிற படங்களுக்கு இருக்கும் பிரச்சனை அளவுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு பிரச்சனை ஏதும் உருவாகாது என்றும் சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











