நிக் ஜோனஸ் போன்று யாருமே எனக்கு அப்படி செய்தது இல்லை: ப்ரியங்கா சோப்ரா

By Siva

நியூயார்க்: நிக் ஜோனஸ் போன்று தனக்கு யாருமே 'அப்படி' செய்தது இல்லை என்று நடிகை ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் தனது கணவர் பற்றி பெருமையாக கூறினார். அவர் கூறியதாவது,

மீட்டிங்

மீட்டிங்

நானும், நிக்கும் காதலிக்கத் துவங்கிய புதிதில் நண்பர்கள் சிலரை சந்தித்தோம். அதே சமயம் படம் தொடர்பாக ஒரு மீட்டிங் இருந்தது. நான் அந்த மீட்டிங் குறித்து சூசகமாக இரண்டு, மூன்று முறை கூறினேன். ஆனால் நிக்கிற்கு அது புரியவில்லை.

ப்ரியங்கா

ப்ரியங்கா

நிக் என்னை தனியாக அழைத்துச் சென்று, நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நீ சொல்ல வந்தது எனக்கு புரிந்தது. வேலையை விட்டுவிட்டு வா என்று சொல்பவன் நான் இல்லை. நீ இந்த இடத்திற்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும். உன்னால் முடிந்தால் நீ அந்த மீட்டிங்கை ரத்து செய்திருப்பாய் என்றார் நிக்.

உழைப்பு

உழைப்பு

நீ மீட்டிங்கிற்கு செல். நண்பர்களை நான் வெளியே அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுக்கிறேன் என்றார் நிக். இதுவரை யாருமே எனக்காக இப்படி செய்தது இல்லை. அவர் என்னை, என் கடின உழைப்பை மதிக்கத் தெரிந்தவர்.

கொடுத்து வைத்தவள்

கொடுத்து வைத்தவள்

நான் நினைத்ததை செய்வேன், அதுவும் நான் விரும்பியது உடனே கிடைக்க வேண்டும். நிக் எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளார். அவர் எனக்கு கணவராக கிடைக்க கொடுத்து வைத்திருக்கிறேன் என்று ப்ரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X