For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரியங்கா சோப்ராவின் நடிப்பு... கண்ணீர் விட்ட கணவர் நிக் ஜோனஸ்

|

மும்பை: தனது கணவர் நிக் ஜோனஸ் சூட்டிங் ஸ்பாட்டில் தனது நடிப்பை பார்த்து அழுதார் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். " தி

ஸ்கை ஐஸ் பிங்க்" எனும் வாழ்கை வரலாறு குறித்த ஹிந்தி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த போதுதான் இந்த சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.

உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் என பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட் பக்கம் சென்றார். பாலிவுட்டில் மாபெரும் வெற்றியை பதித்து விட்டு , சில காலம் ஹாலிவுட்டில் தலைக்காட்டவும் சென்றார். ஹாலிவுர் சீரியஸ், நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலக்கிக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ராவும் பாப் பாடகர் நிக் ஜோனஸும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Priyanka Chopra reveals Nick Jonas cry while shooting for The Sky Is Pink

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தி ஸ்கை ஐஸ் பிங்க்" எனும் வாழ்கை வரலாறு குறித்த ஹிந்தி படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நோயெதிர்ப்பு குறைபாடு கோளாறுடன் பிறந்த ஆயிஷா சவுத்ரி எனும் இளம் ஊக்கமளிக்கும் பேச்சாளர் பற்றின கதையை அடிப்படையாகக் வைத்து எடுக்கப்பட்டது. பார்ஹான் அக்தர் மற்றும் ஜாஐரா வாசிம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சோனாலி போஸ் இயக்கும் இப்படம் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் பட குழுவினர். படத்தின் வேர்ல்ட் ப்ரீமியர் வரும் செப்டம்பர் 13 ம் தேதி வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார். மேலும் பிரியங்கா சோப்ரா டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (டிஐஎஃப்எஃப்) கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தனது கணவர் நிக் ஜோனஸ் இப்படத்தின் படப்பிடிப்பின் போது அழுது விட்டார் என்று கூறியுள்ளார்.

Priyanka Chopra reveals Nick Jonas cry while shooting for The Sky Is Pink

நிக் ஜோன்ஸ் உடன் காதலில் விழுந்த பிரியங்கா சோப்ரா திருமணம் நடைபெறும் சில வாரங்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை கூறியுள்ளார். திருமணத்திற்கான அனைத்து வேலைகளையும் படப்பிடிப்பு செட்டில் இருந்த படியே செய்து கொண்டிருந்தோம்.

எங்களுக்கு இயக்குனர் சோனாலி போஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் இருவரும் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தனர். படப்பிடிப்பின் போது தீவிரமாக ஒரு கட்சியில் நடிக்கும் போது மொத்த செட்டுமே மிகவும் அமைதியாக இருக்கும். அப்போது நிக் ஜோன்ஸ் படப்பிடிப்பு செட்டில் இருப்பது வழக்கம்.

அப்படி ஒரு நாள் அவர் செட்டில் இருந்த போது, ஒரு முக்கியமான காட்சி படமாக்கப்பட்டு வந்தது. படத்தில் பல துயரங்களுடன் போராடும் ஒரு தாய் கதாபாத்திரத்தில் நடித்தேன். அவரின் புதிதாக பிறந்த குழந்தை நோய் எதிர்ப்பு குறைபாடுதான் பல துன்பங்களை அனுபவித்துவரும் குழந்தையை காப்பாற்ற நிதி பற்றாக்குறை துயரங்களுடன் போராடி வரும் தாய் கதாபாத்திரம். பயங்கரமாக அழுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டது.

Priyanka Chopra reveals Nick Jonas cry while shooting for The Sky Is Pink

முழு செட்டுமே மிகவும் அமைதியாக இருந்த தருணம் ஒரு விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. அது என் கணவர் நிக் ஜோனஸின் அழுகை சத்தம். அதை பார்த்ததும் சோனாலி, பிரியங்கா நீங்கள் உங்களுடைய கணவரை அழவைத்து விட்டீர்கள் என்று சிரித்துள்ளார்.

இந்த காட்சி படத்தில் மிகவும் சிறப்பான காட்சி. அதை பிரியங்கா மிக அற்புதமாக நடித்து கொடுத்தார் என்று சொன்னார் சோனாலி. எனவே உணர்ச்சிவசப்படும் ரசிகராக இருந்தால் நீங்கள் இந்த படத்தை பார்த்து அழவேண்டி இருக்கும் அதனால் அதற்கு தயாராகுங்கள் என்றார் சோனாலி போஸ். இப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருப்பதாக படப்பிடிப்பு குழுவினரும் பாராட்டியுள்ளனர். கணவரையே அழவைத்த பிரியங்கா சோப்ரா ரசிகர்களை அழவைப்பாரா பார்க்கலாம்.

English summary
Priyanka Chopra said that the final scene of her upcoming movie, The Sky Is Pink made her husband, singer Nick Jonas, cry. The film, directed by Shonali Bose, is a love story of motivational speaker Aisha Chaudhary's parents. Aisha was diagnosed with pulmonary fibrosis
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more