10 வயது சிறியவர் மீது காதலில் விழுந்தது ஏன்?: ப்ரியங்கா சோப்ரா விளக்கம்

By Siva

Recommended Video

பிரியங்கா - நிக் ஜோனஸ் வைரல் காதல்- வீடியோ

நியூயார்க்: நிக் ஜோனஸ் மீது காதலில் விழுந்தது ஏன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சி நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை நான்கு நாட்கள் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெறுகிறது. திருமணம் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. நிக் ப்ரியங்காவை விட 10 வயது சிறியவர்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் ப்ரியங்காவின் திருமண கொண்டாட்டம் துவங்கியுள்ளது.

நியூயார்க்

நியூயார்க்

திருமணத்தை முன்னிட்டு ப்ரியங்காவின் தோழிகள் சேர்ந்து நியூயார்க் நகரில் அவருக்கு பார்ட்டி கொடுத்தனர். அந்த நிகழ்ச்சிக்கு அவர் திருமணப் பெண் போன்று உடை அணிந்து வந்திருந்தார். அந்த பார்ட்டியின்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.

திருமணம்

திருமணம்

எந்த ஒரு உறவாக இருந்தாலும் ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். இது தான் நிக் மற்றும் எனக்கு இடையே காதல் வலுப்பெற்றதற்கான முக்கிய காரணம். காபி போட்டு கொடுப்பது மரியாதை அல்ல. மாறாக நம்முடைய கடின உழைப்பை பாராட்டுபவராக இருக்க வேண்டும். ஆணின் வேலை போன்றே பெண்ணுக்கும் அவரின் வேலை முக்கியமானது என்பதை உணர்ந்தவராக இருக்க வேண்டும். அவர் முடிவுகள் எடுக்கும்போது நம்மிடமும் கருத்து கேட்க வேண்டும். அது தான் மரியாதை என்கிறார் ப்ரியங்கா சோப்ரா.

 சோனாலி

சோனாலி

ப்ரியங்கா சோப்ராவின் பார்ட்டிக்கு நடிகர் ரன்பிர் கபூரின் அம்மா நீத்து கபூர், நடிகை சோனாலி பெந்த்ரே உள்ளிட்டோர் வந்திருந்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சோனாலி நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோயை தைரியமாக எதிர்த்து போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 போட்டி

போட்டி

திருமண விஷயத்தில் தீபிகா படுகோனே மற்றும் ப்ரியங்கா சோப்ரா இடையே போட்டி உள்ளதாக கூறப்படுகிறது. தீபிகாவின் திருமணம் நவம்பர் மாதம் 20ம் தேதி இத்தாலியில் நடைபெறுகிறது. ஆனால் மக்கள் ப்ரியங்கா சோப்ராவின் திருமணம் பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X