வசூலைக் குவிக்கும் ப்ரியங்கா சோப்ராவின் மேரி கோம்.. இரு நாட்களில் ரூ 17.5 கோடி!

By Shankar

மேரி கோம்... இந்திய விளையாட்டுத் துறை மறக்கமுடியாத பெயர். மணிப்பூரின் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து, குத்துச் சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நிஜ வீராங்கனை.

இவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் எடுக்கப்பட்டுள்ள மேரி கோம் படம் என்று சக்கைப் போடு போடுகிறது.

சஞ்சய் லீலா பன்சாலியும் வயாகாம் 18 நிறுவனமும் இணைந்து தயாரிக்க, ஓமங் குமார் இயக்கியுள்ளார்.

ஓலிம்பிக்கில்

ஓலிம்பிக்கில்

மேரி கோம் 5 முறை 'உலக குத்துச்சண்டை' போட்டியில் 'சாம்பியன்ஷிப்' பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். அதுமட்டுமல்ல, 2012-ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நேற்று வெளியானது

நேற்று வெளியானது

மணிப்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த மேரி கோம், தன் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களை தகர்த்து தன் கனவுகளை அடைந்து உலக சாதனை புரிவதே இப்படத்தின் கதை. இந்த திரைப்படம் நேற்று வெளியானது.

கடும் உழைப்பு

கடும் உழைப்பு

இந்தப் படத்தில் வீராங்கனை மேரி கோமாகவே வாழ்ந்து காட்டியுள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இப்படத்துக்காக கடும் பயிற்சிகளை மேற்கொண்டாராம் ப்ரியங்கா. அவரது ஈடுபாட்டையும் உழைப்பையும் மேரி கோமே பாராட்டியுள்ளார்.

வசூல்

வசூல்

நேற்று இந்தியாவில் மட்டும் 1800 அரங்குகளில் இந்தப் படம் வெளியானதுய வெளியான முதல் இரு தினங்களில் மட்டும் ரூ 17.5 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான வியாகாம் 18 தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X