twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிரியங்கா சோப்ரா பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    By Vignesh Selvaraj
    |

    பரேலி : பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    பாலிவுட், ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஜார்கெண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்தவர். இவரது தந்தை அசோக் சோப்ரா ராணுவத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

    பிரியங்காவின் தந்தை ராணுவ டாக்டர் என்பதால் நாட்டின் பல இடங்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. அடிக்கடி பிரியங்கா குடும்பம் இடம்பெயர்ந்தது.

    உலக அழகி

    உலக அழகி

    பிரியங்கா சோப்ரா 2000-ல் உலக அழகி பட்டம் வென்று புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அப்போது அவர் குடும்பம் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வந்தது. பரேலி தொகுதியின் 5-வது வார்டு வாக்காளர் பட்டியலில் பிரியங்கா குடும்பத்தினரின் பெயர் இருந்தது.

    இடமாற்றம்

    இடமாற்றம்

    சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு பிரியங்கா சோப்ரா குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. ஆனாலும் அவர்கள் பெயர் பரேலி தொகுதி வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இருந்தது. பிரியங்கா குடும்பம் அதற்குப் பிறகு எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.

    வாக்காளர் பட்டியல்

    வாக்காளர் பட்டியல்

    இதனால் பரேலியைச் சேர்ந்த ஒருவர், பிரியங்கா சோப்ரா பரேலி தொகுதியிலும் இல்லை. அவர் ஓட்டளிப்பதும் இல்லை. இதனால் அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பரேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    பிரியங்கா பெயர் நீக்கம்

    பிரியங்கா பெயர் நீக்கம்

    இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரியங்கா சோப்ரா, மற்றும் அவரது தாய் மது சோப்ரா ஆகியோரின் பெயரை வாக்களார் பட்டியலிலிருந்து நீக்க உத்தரவிட்டது. தந்தை அசோக் சோப்ரா 4 ஆண்டுக்கு முன்பே இறந்து விட்டதால் அவரது பெயர் ஏற்கெனவே வாக்காளர் பட்டியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bareilly court orders to remove Bollywood actress Priyanka Chopra's name in Bareilly constituency voters list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X